குபாங் கிரியான் (P024) மலேசிய மக்களவைத் தொகுதி கிளாந்தான் | |
---|---|
Kubang Kerian (PP024) Federal Constituency in Kelantan | |
குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி (P024 Kubang Kerian) | |
மாவட்டம் | கோத்தா பாரு மாவட்டம் கிளாந்தான் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 114,353 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | குபாங் கிரியான் தொகுதி |
முக்கிய நகரங்கள் | குபாங் கிரியான், பெங்காலான் செப்பா, கோத்தா பாரு, ரந்தாவ் பாஞ்சாங், பாசிர் பூத்தே, |
பரப்பளவு | 141 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | துவான் இப்ராகிம் துவான் மான் (Tuan Ibrahim Tuan Man) |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kubang Kerian; ஆங்கிலம்: Kubang Kerian Federal Constituency; சீனம்: 古邦阁亮国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், கோத்தா பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P024) ஆகும்.[8]
குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
குபாங் கிரியான் நகரம் கிளாந்தான் மாநிலத்தில், கோத்தா பாரு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் கிளாந்தான் மாநிலத்தின் அரச நகரமும் ஆகும்.[10]
கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 5 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 445 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நகரில் கிளாந்தான் சுல்தான் அரண்மனை உள்ளது. அத்துடன் அந்த அரண்மனை கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் உள்ளது.
குபாங் கிரியானில் பெரும்பான்மையானவர்கள் முசுலீம்கள். இதனால் ஏராளமான பள்ளிவாசல்கள் உள்ளன. மிகப்பெரிய பள்ளிவாசல் சுல்தான் இசுமாயில் பெட்ரா பள்ளிவாசல் (Sultan Ismail Petra Mosque) ஆகும். இந்தப் பள்ளிவாசல் நீலப் பள்ளிவாசல் (Blue Mosque) என்றும் அழைக்கப்படுகிறது.
குபாங் கிரியான் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1994-ஆம் ஆண்டில் நீலாம்புரி தொகுதியில் இருந்து குபாங் கிரியான் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P024 | 1995–1999 | முகமது சாபு (Mohamad Sabu) |
மலேசிய இசுலாமிய கட்சி |
10-ஆவது மக்களவை | 1999–2004 | உசாம் மூசா (Husam Musa) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | சலாவுதீன் அயூப் (Salahuddin Ayub) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | அகமத் பைகாகி அத்திகுல்லா (Ahmad Baihaki Atiqullah) | ||
14-ஆவது மக்களவை | 2018–2020 | துவான் இப்ராகிம் துவாம் மான் (Tuan Ibrahim Tuan Man) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
113,640 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
82,263 | 71.62% | ▼ - 7.47% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
81,384 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
211 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
668 | ||
பெரும்பான்மை (Majority) |
40,487 | 50.19% | + 19.65 |
வெற்றி பெற்ற கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11] |
கட்சி | வேட்பாளர் | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | துவான் இப்ராகிம் துவான் மான் (Tuan Ibrahim Tuan Man) |
81,384 | 55,654 | 68.38% | + 12.22% | |
பாரிசான் நேசனல் | நூருல் அமல் முகமது பௌஸி (Nurul Amal Mohd Fauzi) |
- | 14,807 | 18.19% | - 7.43% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | வான் அகமது கமில் வான் அப்துல்லா (Wan Ahmad Kamil Wan Abdullah) |
- | 10,236 | 12.58% | - 5.64% ▼ | |
தாயக இயக்கம் | முகமது ரிசல் ரசாலி (Mohamad Rizal Razali) |
- | 687 | 0.84% | + 0.84% |