குபாங் பாசு (P006) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Kubang Pasu (P006) Federal Constituency in Kedah | |
![]() கெடா மாநிலத்தில் குபாங் பாசு மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | குபாங் பாசு மாவட்டம்; கெடா |
வாக்காளர் தொகுதி | குபாங் பாசு தொகுதி |
முக்கிய நகரங்கள் | புக்கிட் காயூ ஈத்தாம், சாங்லூன், ஜித்ரா |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | ![]() |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | கு அப்துல் ரகுமான் கு இசுமாயில் (Ku Abdul Rahman Ku Ismail) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 108,217[1][2] |
தொகுதி பரப்பளவு | 634 ச.கி.மீ[3] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
குபாங் பாசு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kubang Pasu; ஆங்கிலம்: Kubang Pasu Federal Constituency; சீனம்: 巴东特拉普联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், குபாங் பாசு மாவட்டத்தில் (Kubang Pasu District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P006) ஆகும்.[4]
குபாங் பாசு தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து குபாங் பாசு தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), குபாங் பாசு தொகுதி 31 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[5]
மலேசியா-தாய்லாந்து எல்லை (Malaysia–Thailand border) நகரமான புக்கிட் காயூ ஈத்தாம் (Bukit Kayu Hitam) இந்த குபாங் பாசு மாவட்டத்தில் தான் உள்ளது. அத்துடன் சாங்லூன் (Changlun) கல்வி வளாகம்; மற்றும் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமான ஜித்ரா (Jitra) நகரமும் இங்குதான் உள்ளன.
குபாங் பாசு மாவட்டத்தின் வடக்கில் பெர்லிஸ் மாநிலம், மற்றும் தாய்லாந்து; கிழக்கில் பாடாங் தெராப் மாவட்டம்; தெற்கில் கோத்தா ஸ்டார் மாவட்டம், பொக்கோக் சேனா மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை எல்லைகளாக உள்ளன.
குபாங் பாசு மாவட்டம் 21 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[6]
# | முக்கிம் | 2020 மக்கள் தொகை[7] | பரப்பளவு (ச.கி.மீ)[8] |
---|---|---|---|
1 | முக்கிம் ஆ (Mukim Ah) | 4,243 | 28.12 |
2 | முக்கிம் பிஞ்சால் (Mukim Binjal) | 3,504 | 22.9 |
3 | முக்கிம் புக்கிட் திங்கி (Mukim Bukit Tinggi) | 6,724 | 8.12 |
4 | முக்கிம் கெலோங் (Mukim Gelong) | 10,830 | 28.6 |
5 | முக்கிம் உஸ்பா (Mukim Husba) | 3,393 | 26.41 |
6 | முக்கிம் ஜெராம் (Mukim Jeram) | 7,828 | 38.17 |
7 | முக்கிம் ஜெர்லுன் (Mukim Jerlun) | 17,299 | 65.05 |
8 | முக்கிம் ஜித்ரா (Mukim Jitra) | 23,710 | 13.12 |
9 | முக்கிம் கெப்பெலு (Mukim Kepelu) | 9,271 | 40.72 |
10 | முக்கிம் குபாங் பாசு (Mukim Kubang Pasu) | 2,698 | 41.13 |
11 | முக்கிம் மாலாவ் (Mukim Malau) | 3,209 | 48 |
12 | முக்கிம் நாகா (Mukim Naga) | 28,135 | 47.15 |
13 | முக்கிம் பெராகு (Mukim Perahu) | 3,276 | 19.57 |
14 | முக்கிம் பெலுபாங் (Mukim Pelubang) | 9,371 | 12.38 |
15 | முக்கிம் பெரிங் (Mukim Pering) | 6,679 | 40.51 |
16 | முக்கிம் புத்தாட் (Mukim Putat) | 5,012 | 28.39 |
17 | முக்கிம் சாங்லாங் (Mukim Sanglang, Kedah) | 11,891 | 42.84 |
18 | முக்கிம் லாக்கா (Mukim Laka) | 13,351 | 110.4 |
19 | முக்கிம் தெமின் (Mukim Temin) | 35,913 | 220.3 |
20 | முக்கிம் துஞ்சாங் (Mukim Tunjang) | 6,542 | 31.58 |
21 | முக்கிம் வாங் தெப்புஸ் (Mukim Wang Tepus) | 1,600 | 27.27 |
குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
குபாங் பாசு பாராட் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
4-ஆவது | 1974–1978 | மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) |
பாரிசான் (அம்னோ) |
5-ஆவது | 1978–1982 | ||
6-ஆவது | 1982–1986 | ||
7-ஆவது | 1986–1990 | ||
8-ஆவது | 1990–1995 | ||
9-ஆவது | 1995–1999 | ||
10-ஆவது | 1999–2004 | ||
11-ஆவது | 2004–2008 | சொகாரி பகாரும் (Mohd Johari Baharum) | |
12-ஆவது | 2008–2013 | ||
13-ஆவது | 2013–2018 | ||
14-ஆவது | 2018–2020 | அமிருடின் அம்சா (Amiruddin Hamzah) |
பாக்காத்தான் (பெர்சத்து) |
2020 | பெர்சத்து | ||
சுயேச்சை | |||
2020–2022 | பெஜுவாங் | ||
15-ஆவது | 2022 – தற்போது வரையில் | ரகுமான் இசுமாயில் (Abdul Rahman Ismail) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
108,217 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
52,909 | 77.07% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
83,402 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
85 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
617 | - |
பெரும்பான்மை (Majority) |
31,584 | 37.87% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் | |
Source: Results of Parliamentary Constituencies of Kedah |
வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
அப்துல் ரகுமான் இசுமாயில் (Abdul Rahman Ismail) |
பெரிக்காத்தான் | 47,584 | 57.05% | +57.05 ![]() | |
ஐசுதீன் ரிபின் (Aizuddin Ariffin) |
பாக்காத்தான் | 16,000 | 19.18% | -30.52 ▼ | |
அசுமுனி அசன் (Hasmuni Hassan) |
பாரிசான் | 14,489 | 17.37% | -10.80 ▼ | |
அமிருதீன் அம்சா (Amiruddin Hamzah) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 5,329 | 6.39% | +6.39 ![]() |
நாடாளுமன்றம் | சட்டமன்றம் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
குபாங் பாசு (Kubang Pasu) |
புக்கிட் காயூ ஈத்தாம் | ||||||
ஜித்ரா | |||||||
துஞ்சாங் |
எண் | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N05 | புக்கிட் காயூ ஈத்தாம் (Bukit Kayu Hitam) |
அலிமேதன் சாதியா சாத் (Halimaton Shaadiah Saad) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
N06 | ஜித்ரா (Jitra) |
முக்ரிஸ் மகாதீர் (Mukhriz Mahathir) |
உள்நாட்டு போராளிகள் கட்சி |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)