தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | குமார் கார்த்திகேயா சிங் |
பிறப்பு | 26 திசம்பர் 1997 குவாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
மட்டையாட்ட நடை | வலதுகை ஆட்டக்காரர் |
பந்துவீச்சு நடை | சுழல் பந்து வீச்சாளர் |
பங்கு | பந்து வீச்சாளர் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2018–முதல் | மத்தியப் பிரதேச துடுப்பாட்ட அணி |
2022–முதல் | மும்பை இந்தியன்ஸ் |
மூலம்: ESPNcricinfo, 26 செப்டம்பர் 2018 |
குமார் கார்த்திகேயா (Kumar Kartikeya)(பிறப்பு 26 திசம்பர் 1997) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டு துடுப்பாட்டத்தில் மத்தியப் பிரதேசத்தையும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] குமார் 26 செப்டம்பர் 2018 அன்று விஜய் ஹசாரே துடுப்பாட்டப் போட்டியில் மத்தியப் பிரதேசத்திற்காகத் தனது ஏ தரப் போட்டியில் அறிமுகமானார்.[2] இதைத் தொடர்ந்து, இவர் 2018 நவம்பர் 28 அன்று ரஞ்சிக் கோப்பையில் மத்தியப் பிரதேசத்திற்காக அறிமுகமானார்.[3] கார்த்திகேயா 2019 மார்ச் 2 அன்று சையத் முசுடாக் அலி கோப்பைக்கான போட்டியில் மத்தியப் பிரதேசத்திற்காக இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[4]
ஏப்ரல் 2022-இல், அர்சத் கான் காயம் காரணமாக விலகிய பின்னர், 2022 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்சத் கானுக்குப் பதிலாகக் கார்த்திகேயா விளையாடினார்.[5]