சமையல் ![]() |
இது சமையல் முறை கட்டுரைத் தொடரின் பகுதியாகும் |
செய்முறைகளும் சமையல் பொருள்களும் |
---|
செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள் சமைத்தலில் உள்ள அளவுகள் |
தமிழர் சமையல் |
உணவுப் பொருட்கள் பட்டியல்கள் |
பிராந்திய சமையல் முறை |
உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன் |
See also: |
பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள் Wikibooks: Cookbook |
குமாவுனி உணவு (Kumaoni cuisine) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள குமாவுன் பகுதியின் உணவாகும். குமாவுனி உணவு எளிமையானது மற்றும் சத்தானது. இமயமலையின் கடுமையான சூழலுக்கு ஏற்றது. கொள்ளு (அல்லது குலாத், ஒரு உள்ளூர் வகை பீன்ஸ்) போன்ற பருப்பு வகைகளைப் பயன்படுத்தி, குமாவுனி ரைதா, பால் மித்தாய், ராஸ் பாத், சாயின், பாண்டா மற்றும் தட்வானி போன்ற பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தனித்துவமான தயாரிப்புகள் ஆகும். தயிருடன் தாளிக்கப்பட்ட ஜோலி அல்லது கறி ஒரு வகையான குமாவுனி உணவாகும். பாட் பருப்புகளிலிருந்து சுட்கனி மற்றும் ஜூலா தயாரிக்கப்படுகிறது. அரிசி மற்றும் கோதுமையுடன் கூடிய மடுவா போன்ற தானியங்கள் பிரபலமானவை.
இறைச்சியும் தயாரிக்கப்படுகிறது. இவை வட இந்தியாவில் தயாரிக்கப்படும் செய்முறையை ஒத்திருக்கிறது.[6] பல சிற்றுண்டிகள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் பானங்கள் குமாவுனி உணவு வகைகளின் முக்கியமானதாக உள்ளன. இவை பாரம்பரியமாக உத்தராகண்டில் பல பகுதிகளில் உண்ணப்படுகிறது.[7]