குமிழ் தவளை | |
---|---|
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு வளர்ந்த ஆண் குமிழ் தவளை | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Raorchestes |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/RaorchestesR. chalazodes
|
இருசொற் பெயரீடு | |
Raorchestes chalazodes (Günther, 1876) | |
வேறு பெயர்கள் | |
Philautus chalazodes (குந்தர், 1876) |
குமிழ் தவளை[2] (Raorchestes chalazodes) இது ரகோபோரிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினமாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படக்கூடியது.[1][3] மிக அரிதான, அழியும் தருவாயில் உள்ள தவளை ஆகும். 136 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தவளையின் முட்டை தலைப்பிரட்டையாக மாறாமல், நேரடியாகச் சிறு தவளையாக மாறிவிடும் சிறப்புத்தன்மை கொண்டது.[2]
இதில் பெண் தவலையானது 28 மிமீ (1.1 அங்குலம்) நீளமுடையன.[4] இவற்றின் உடல் பச்சை நிறமுடையவையாக இருக்கும். அடிப்பகுதி வெள்ளை நிறத்தோடும், இடுப்புப் பகுதியில் கரு நீல புள்ளிகள் உள்ளன. இதன் தனித்துவமான அடையாளமாக இதன் விழிபடலத்தில் தங்கநிற திட்டுகள் கானப்படும்.[5]
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)