![]() | |
துறை | பல்சுவை |
---|---|
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர் | பிரியா கல்யாணராமன் (எ) ராமச்சந்திரன் |
Publication details | |
பதிப்பகம் | குமுதம் பப்ளிகேசன்ஸ் (இந்தியா) |
வெளியீட்டு இடைவெளி | வார இதழ் |
ISO 4 | Find out here |
Links | |
|
குமுதம் (Kumudam) தமிழ்நாட்டில் வெளியாகும் பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது எஸ்.ஏ.பி. அண்ணாமலை மற்றும் அவரது நெருங்கிய நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான பி.வி. பார்த்தசாரதி ஆகியோரால் 1948 இல் தொடங்கப்பட்டது.[1] குமுதம் குழுமத்தினால் குமுதம் ரிப்போட்டர், குமுதம் தீராநதி, குமுதம் சினேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஜோதிடம், குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் போன்ற இதழ்கள் வெளியிடப்படுகின்றன. 1986 இல் 620,000 பிரதிகள் புழக்கத்தில் இருந்தது.[2][3] 2001, 2002 காலப்பகுதியில் குமுதம் யாழ்மணம் என்ற இணைய இதழும் வெளியானது. இதில் புலம்பெயர்ந்த ஈழத்தவர்களின் படைப்புகளும், இந்தியத் தமிழர்களின் படைப்புகளும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன.
செப்டம்பர் 2015 இல், குமுதம் ரிப்போர்ட்டர் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், "லெக்கிங்ஸ்" அணியும் பெண்களை விமர்சித்தபோது, குமுதம் விமர்சனத்திற்கு உள்ளானது. கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள பெண்களின் படங்கள் அனுமதியின்றி அச்சிடப்பட்டதாக கூறப்படுகிறது.[4]