பாரம்பரிய குமுரா உடையில் ஒரு நடனக்கலைஞர் | |
பூர்வீக பெயர் | ଘୁମୁରା |
---|---|
வகை | நடனம் |
தோற்றம் | ஒடிசா, இந்தியா |
குமுரா நடனம் என்பது இந்திய மாநில ஒடிசாவின் களாஹாண்டி மாவட்டத்தின் நாட்டுப்புற நடனம் ஆகும்.[1] குமுராவின் ஆடைக் குறியீடு ஒரு பழங்குடி நடனத்தைப் போலவே இருப்பதால் இது நாட்டுப்புற நடனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் [2] குமுராவின் நடன முத்திரை மற்றும் நடன வடிவங்களைப் பற்றிய வாதங்களை நோக்குகையில் இந்த நடனம் இந்தியாவின் பிற செவ்வியல் நடன வடிவங்களுடன் அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ளது.
வரலாற்று ஆதாரங்களைத் தவிர, குமுரா நடனத்தின் தோற்றம் பொதுமக்களின் பார்வைகளையும் புராணங்களையும் கருத்தில் கொண்டுள்ளது. புராணத்தை அடிப்படையாகக் கொண்டு, கவிஞர் சிவம் பாசின் பாண்டா 1954 இல் குமுர ஜன்ம பிதான்எ என்ற நூலை எழுதினார். நுமினி பாசின் மற்றும் ககனேஸ்வர் ஆகியோர் குமுராவின் தோற்றம் பற்றிய ஒரு கட்டுக்கதையை விவரித்திருக்கிறார்கள், அதில் சந்திர த்வாஜா என்பவர் முதலில் குமுரா நடனத்தை நிறுவியுள்ளார் என்றும் பின்னர் கார்த்தவீரியன் என்ற அசுரன் அதனைக் கைப்பற்றியதாகவும் விவரித்துள்ளனர்.
சாந்தி புராணத்தின் படி, நித்திய சக்தியான தெய்வம்- துர்க்கையானவர், சொர்க்கத்தின் அனைத்து கடவுள்களையும் மகிசாசூரன் என்ற அரக்க மன்னனைக் கொல்ல தங்கள் ஆயுதங்களைக் கடன் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டது. மேலும் அந்த ஆயுதங்களைக் கருவிகளாக அனுப்பவும் கேட்டது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட போர்-இசைக் கருவிகளில் ஒன்று குமுராவாகும். இது டமருகம் என்ற சிவனின் இசைக் கருவியின் ஒரு பகுதியையும், சரஸ்வதி தெய்வத்தின் வீணையும் இணைத்து உருவாக்கப்பட்டதாகும்.
மகாபாரதத்தின்படி குமுராவை கடவுளர்களும் தெய்வங்களும் போரின் போது ஒரு இசைக் கருவியாகப் பயன்படுத்தினர். சரள மகாபாரதத்தின் கூற்றுப்படி, சத்திய யுகத்தில், மகிசாசூரனின் பேரனான கோகிங் தைத்யா மன்னரின் காலத்தில் ஜெனபாலி-பாட்டனா தலைநகராக இருந்தது. ஜெனபாலி-பாட்டனா இன்றைய ஜுனாகர் என்பதை பலர் ஏற்றுக்கொள்கிறார்கள். இருப்பினும், மகாபாரதத்தின் மத்திய பர்வாவில், கோகிங் தைத்யாவைக் கொன்றது குறித்த விளக்கத்தில் குமுரா குறிப்பிடப்பட்டுள்ளது. மகிசாசுரரின் ராணா-பத்யா (போர் இசை) சரள தாசா என்றும் வர்ணித்துள்ளது. [3]
குமுரா என்பது இலங்கை மற்றும் லங்கா-கர் மன்னனான இராவணனின் போர் இசைக்(ராணா-பத்யா) கருவி என்று ஒரு சில நிபுணர்கள் நம்பினர். ராவணனின் விருப்பமான தெய்வமான லங்கேஸ்வரி தேவி இப்பகுதியில் வழிபடுகிறார். ஹனுமனால் லங்கா அழிக்கப்பட்டதும், ராவணன் கொல்லப்பட்டதும், லங்கேஸ்வரி தேவி லங்காவை விட்டு வெளியேறி ஜெனபாலி-படானாவில் (இப்போது அது ஜுனாகர், கலஹந்தி) குடியேற வந்தார்.
களாஹாண்டி மாவட்டத்தில் குடஹண்டி மற்றும் நுவாபா மாவட்டத்தின் யோகி மாதா ஆகிய இடங்களில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த சில குகை ஓவியங்கள் உள்ளன. அவற்றில் குமுரா, டமருகம் மற்றும் பிற கவர்ச்சிகரமான பொருட்களைப் போல தோற்றமளிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்ற என்பதைத் தொல்பொருள் ஆய்வுச் சான்றுகள் நிரூபிக்கிறது [4]
இந்த பாறை ஓவியத் தளங்கள் கிமு 8000 க்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை, அத்தகைய ஓவியத்திலிருந்து குமுரா மற்றும் டமருகம் என்ற இசைக் கருவியின் பழங்காலத்தை கற்பனை செய்யலாம். புராண யுகத்தில், களாஹாண்டி வளமானதாகவும் வளர்ச்சியடைந்த நாகரிகத்தை கொண்டிருந்தது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குமுராவின் தோற்றம் பண்டைய காலத்திற்குச் செல்கிறது.
இந்திராவதி நதி பள்ளத்தாக்கில் ஒரு அழகான நீர்வீழ்ச்சி உள்ளது, இது ஆரம்பத்தில் சக்ரகோட்டின் சிண்டக் நாகர்களால் அடையாளம் கண்டறியப்பட்டது. [5] குமுரா நடனம் இந்த நதி பள்ளத்தாக்கிலிருந்து உருவானது என்றும், படிப்படியாக இந்தராவதி மற்றும் மகாநதி இடையேயான பகுதிகளில் பரவியது என்று பலர் நம்புகிறார்கள். எனவே இந்த நடன வடிவம் கி.பி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை இது குறிக்கிறது. மறுபுறம், கி.பி 1008 இல் நாகா வம்சம் தங்கள் பழைய தலைநகரான ஜுகசாய்பட்னாவிலிருந்து ஜுனாகருக்கு மாற்றப்பட்டபோது, கலம்பூரின் 'பாங்கா-பைக்கா' லங்கேஸ்வரி தெய்வத்தை சுமந்து குமுரா இசைக்க ஒரு பெரிய ஊர்வலத்துடன் ஜுனகருக்கு சென்றதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[6] காரியாரில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளநெஹெனாவில் உள்ள இடைக்கால ஆய்வுத் தளத்தில் குமுரா பொருளை ஒத்ததாகக் காணப்படும், 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த டெரகோட்டா மற்றும் சில கல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி.பி 12 ஆம் நூற்றாண்டில் குமுரா நடனம் ஏற்கனவே புகழ்பெற்று விளங்கியது. இது கோனார்க் சூரிய கோயிலின் நிருத்யா மந்திரின் கல் துளை ஒன்றில் குமுரா என்ற கருவியை ஒரு நபர் வாசிக்கும் காட்சியில் இருந்து தெளிவாகிறது. புவனேஸ்வரில் உள்ள பீமேஸ்வர் கோயில் குமுரா நடனத்தின் தோற்றம் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் இருந்தது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் குமுரா நடனத்தின் மற்றொரு காட்சியைக் காட்டுகிறது [4]