கும்பர்லேண்ட் ஏரி | |
---|---|
வூல்ஃப் க்ரீக் அணையில் இருந்து பார்க்கும்போது கும்பர்லாண்ட் ஏரியின் தோற்றம் | |
அமைவிடம் | கிளிண்டன், லாவ்ரல், மெ கிரையரி, புலாஸ்கி, ரஸ்சல், மற்றும் வேய்னி, கெண்ட்டகி |
ஆள்கூறுகள் | 36°53′20″N 85°3′0″W / 36.88889°N 85.05000°W |
முதன்மை வரத்து | கும்பர்லேண்ட் ஆறு |
முதன்மை வெளியேற்றம் | கும்பர்லேண்ட் ஆறு |
வடிநில நாடுகள் | ஐக்கிய அமெரிக்க மாநிலம் |
மேற்பரப்பளவு | 265.2 km2 (102.4 sq mi) |
சராசரி ஆழம் | 27.4 மீட்டர் (90 அடி) |
அதிகபட்ச ஆழம் | 60 மீட்டர் (197 அடி) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 220 மீட்டர் (722 அடி) |
கும்பர்லேண்ட் ஏரி என்பது ஒரு நீர்த்தேக்கம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின், வேய்ன் கவுண்டி, ரஸ்சல் கவுண்டி, பால்ஸ்கி கவுண்டி, மெ கிரையரி கவுண்டி, லாவ்ரல் கவுண்டி, கிளின்டன் கவுண்டி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கென்டக்கி மாகாணத்தில் உள்ளது [1] இதை வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் நீர்மின் உற்பத்தி ஆகிய முதன்மை நோக்கங்களுக்காக கட்டப்பட்டது. இதன் கரை 1,255 மைல்கள் (2,020 கி) நீளமுடையது ஆகும். மேலும் இந்த ஏரி 65,530 ஏக்கர் (266 ச.கி.மீ) பரப்பை உள்ளடக்கியது. இதன் அதிகபட்ச மின் ஆற்றல் உற்பத்தியின் அடிப்படையில் அமெரிக்காவில் 9 வது இடத்தைப் பெறுகிறது.