கும்ரத்து பள்ளத்தாக்கு | |
---|---|
![]() கும்ரத்து பள்ளத்தாக்கின் மாலை நேரக் காட்சி | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
மாவட்டம் | மேல் திர் மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5 (PST) |
கும்ரத்து பள்ளத்தாக்கு ( Kumrat Valley ) என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் மேல் திர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்காகும்.[1][2] இது பஞ்ச்கோரா ஆற்றின் கரையில் தால் நகரத்திலிருந்து சுமார் 45 நிமிடங்கள் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது கைபர் பக்துன்க்வாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.[3]
ஒவ்வொரு கோடை காலத்திலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இப்பள்ளத்தாக்கு அதன் பசுமை மற்றும் குளிர்ந்த வானிலைக்காக வருகை தருகின்றனர். ஈகைத் திருநாள் விடுமுறை நாட்களில், தினசரி அடிப்படையில் சுமார் 2,000 வாகனங்கள் இப்பகுதிக்குள் நுழைகின்றன.[4] நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தி மட்டுமே இதை அணுக முடியும்.[3]
பசுமையான மேய்ச்சல் நிலங்கள், பனி மூடிய மலைகள், பஞ்சகோரா ஆறு, மூடுபனி மேடுகள் மற்றும் காடுகள் ஆகியவை இப்பகுதியின் ஈர்ப்புகளாகும். இது பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாக செயல்படுகிறது.[5]
பள்ளத்தாக்கின் மற்றொரு அம்சம் பஞ்சகோரா ஆற்றை ஒட்டிய சமதளத்தில் அமைந்துள்ள அதன் உயரமான தேவதாரு மரங்கள் ஆகும்.[6] பல இடங்களில், பஞ்ச்கோரா ஆறு கால்வாய்களாகப் பிரிகிறது. அதன் கரையில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக சில தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன . இங்கும் பல அருவிகள் உள்ளன.[7]
தேவதாரு காடுகள் இப்பள்ளத்தாக்கில் வேகமாக அழிந்து வருகிறது. மேலும் கடுமையான குளிர்காலத்தில் வெப்பத்திற்காகவும் சமையல் நோக்கங்களுக்காகவும் உள்ளூர்வாசிகளாலும் இது எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பள்ளத்தாக்கின் மக்கள், 2010களில், இயற்கை எரிவளி வசதி செய்து கொடுத்தால், தேவதாரு மரங்களை வெட்டுவதை நிறுத்தத் தயார் என்று அரசுக்குத் தெரிவித்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை.[8]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)"Kumrat Valley - 18 Places to See" பரணிடப்பட்டது 2022-10-23 at the வந்தவழி இயந்திரம். www.manhoos.com. Retrieved 14 August 2018.