குரங்கு மரம் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | சிராந்தோடென்ரான்
|
இனம்: | சி.பென்டாடாக்டிலான்
|
இருசொற் பெயரீடு | |
சிராந்தோடென்ரான் பென்டாடாக்டிலான் Larreategui[1] |
குரங்கு மரம் (Chiranthodendron ) என்பது மால்வேசியே குடும்பத்தில் ஒரு பூக்கும் தாவர இனமாகும். இது சிராந்தோடென்ட்ரான் பென்டாடாக்டைலான் என்ற ஒற்றை வகை மரங்களை உள்ளடக்கியது.
இந்த மரம் டெவில்ஸ், குரங்கு அல்லது மெக்சிகன் கை மரம் அல்லது ஆங்கிலத்தில் கை மலர் என்றும், எசுப்பானிய மொழியில் árbol de las manitas ( சிறிய கைகளின் மரம் ) என்றும், நாகவற் மொழியில் mācpalxōchitl ( உள்ளங்கை மலர் ) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தனித்துவமான சிவப்பு மலர்கள், திறந்த மனிதக் கைகளை ஒத்திருக்கும். இதன் அறிவியல் பெயர் "ஐந்து விரல் கை மலர் மரம்" என்பதாகும். இச்சாதியில் ஒரே இனம் மட்டுமே உள்ளது.
தாவரவியல் பெயர் : சிராந்தோடென்ரான் பென்டாடாக்டிலான் Chiranthodendron pentadactylon
குடும்பம் : ஸ்டெர்குலியேசியீ(Sterculiaceae)
இம்மரம் 100 அடி உயரம் வளரக் கூடியது. இதனுடைய இலைகள் பெரியதாக ஒரு அடி நீளத்திற்கு இருக்கும். இம்மரத்தில் வரும் பூக்கள் மிக விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. இதன் பூக்கள் ஆழ்ந்த சிவப்பு நிற மகரந்த தாள்கள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது. இது மனித கையைப் போலவே உள்ளது. விரல்கள் போல் நீண்டும் அதன் நுனியில் வளைந்த நகமும் உள்ளது. பெருவிரல் போன்றதும் உள்ளது. இந்த கைபோன்ற அமைப்பு மற்ற எந்த வகை தாவரத்திலும் கிடையாது.
இம்மரம் மெக்சிகோவிலும், குவாத்தமாலாவிலும் வளர்கிறது.[1] புரதான காலத்தில் இம்மரத்தைக் கண்டு மெக்சிகோ மக்கள் பயந்து வந்தனர். பின்னர் அஸ்டெக் மக்கள் இதனை வணங்கி வந்தனர். [1]
அஸ்டெக்குகளும் மற்றவர்களும் மரத்தின் பூக்களைக் கொண்ட கரைசல்களை அடிவயிற்று வலி [2] மற்றும் இதயப் பிரச்சனைகளுக்கு தீர்வாகப் பயன்படுத்தினர்.[3][4] இத்தகைய தீர்வுகள் கால்களில் நீர்க்கோர்த்தல் மற்றும் சீரம் கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன. மேலும் அவை கிளைகோசைடுகளான குவெர்செடின் மற்றும் லுடோலின் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், டையூரிடிக்களாக செயல்படுகின்றன