குரங்குப் பூ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Asparagales
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Epidendroideae
|
சிற்றினம்: | |
துணை சிற்றினம்: | |
பேரினம்: | |
இனம்: | D. gigas
|
இருசொற் பெயரீடு | |
Dracula gigas (Luer & Andreetta) Luer | |
வேறு பெயர்கள் [1] | |
குரங்குப் பூ. ஆங்கிலத்தில் Dracula gigas அல்லது monkey orchid என்று குறிப்பிடப்படும். குரங்கின் முகம் போலவே பூ மலர்ந்திருக்கும். அதனால்தான் இந்தப் பூவுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.[2]
தாவரங்களில் ஆர்க்கிட் மிகப்பெரிய குடும்பம். இந்தக் குடும்பத்தில் சுமார் 26,000 இனங்கள் உள்ளன. ஆர்கிட் பூக்களின் சிறப்பு கண்கவர் வண்ணங்களிலும், விதவிதமான உருவங்களிலும் இருப்பதாகும். உலகின் பல இடங்களிலும் ஆர்கிட் இனங்கள் இருக்கின்றன.
பெரு, ஈக்வடார் போன்ற தென் அமெரிக்க நாடுகளில் உள்ள காடுகளில் மட்டுமே குரங்குப் பூக்கள் காணப்படுகின்றன. லூயர் என்ற தாவரவியல் அறிஞர்தான் மங்கி ஆர்கிட் என்று இந்தப் பெயரைச் சூட்டினார். இந்த குரங்குப் பூவில் சுமார் 120 வகைகள் இருக்கின்றன. இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு, மஞ்சள் என்று வண்ணங்களில் வேறுபட்டாலும், உருவத்தில் குரங்குபோலவே உள்ளன இந்தப் பூக்கள்.[3]