குரு நானக் விளையாட்டரங்கம் (Guru Nanak Stadium) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் அமைந்துள்ள ஒரு கால்பந்து மைதானமாகும். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் இங்கு நடைபெற்றன. தற்போது பஞ்சாப் கால்பந்து சங்கத்தின் ஈரோ ஐ-கூட்டிணைவு அணியின் சொந்த மைதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. 20,000 பார்வையாளர்கள் அமர்ந்து இரசிக்கும் வகையில் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. 8 செயற்கைத் தட ஓடுபாதைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு ஓடுபாதைகள் பயிற்சிக்கான பாதைகளாகும். எந்தவொரு தேசிய அல்லது பன்னாட்டுப் போட்டியையும் நடத்துவதற்கான பன்னாட்டு அளவிலான தரங்களுடன் இந்த ஓடுபாதைகள் ஒத்துப்போகின்றன. நன்கு பராமரிக்கப்படும் கால்பந்து ஆடுகளம் இவ்விளையாட்டு அரங்கிலுள்ளது. வருடாந்திர தேசிய கால்பந்து கூட்டிணைவுப் போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன.[1][2][3][4][5][6]
குரு நானக் விளையாட்டரங்கம் பஞ்சாப் மாநிலத்தின் லூதியான நகரில் இருக்கும் காந்தி நகர், கோ-இ- பிசா என்ற முகவரியில் அமைந்துள்ளது. சவுரா பசார் லூதியானா இரயில் நிலையம் மற்றும் லூதியானா பேருந்து நிலையம் ஆகிய இடங்களும் சில நிமிடங்கள் பயணத் தொலைவில் இம்முகவரி உள்ளது.
30.910961° வடக்கு 75.845082°கிழக்கு என்ற அட்சதீர்க்க அடையாள ஆள்கூறுகளில் குரு நானக் விளையாட்டரங்கம் இடம்பெற்றுள்ளது.
விளையாட்டரங்கத்திற்கு அருகில் பேருந்து நிலையம் உள்ளது. முதலில் பேருந்து நிலையத்திற்கு வந்து பின்னர் வாடகை வாகனம் மூலம் செல்வது அரங்கத்தை அடைய எளிய வழியாகும். 5 முதல் 10 நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இரயில் நிலையத்திலிருந்து குறுகிய நடை தூரத்தில் மைதானத்தை அடையலாம்.
சுமார் 50 கோடி ரூபாய் செலவில் குரு நானக் விளையாட்டரங்கம் கட்டப்பட்டுள்ளது.
மினெர்வா பஞ்சாப் கால்பந்து சங்கம் இம்மைதானத்தில் விளையாடத் தொடங்கிய பிறகு இரசிகர்கள் மற்றும் கால்பந்து வல்லுநர்கள் ஆட்டமைதானத்தின் தரம் குறைவாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட குருநானக் அரங்கத்தில் 31 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
கனடா கபடிக் கோப்பை போன்ற சில உள்நாட்டு கபடிப் போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன. கபடி உலகக் கோப்பை போட்டிகளும் இங்கு நடைபெற்றன.
நாள் | நேரம் | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வகை |
---|---|---|---|---|---|---|
12 ஏப்ரல் 2010 | 17:30 | ![]() |
66-22 | ![]() |
மூன்றாம் இடத்திற்கான போட்டி | ஆண்கள் |
12 ஏப்ரல் 2010 | 19:30 | ![]() |
58-24 | ![]() |
இறுதிப்போட்டி | ஆண்கள் |
20 நவம்பர் 2011 | 17:15 | ![]() |
60-22 | ![]() |
மூன்றாம் இடத்திற்கான போட்டி | ஆண்கள் |
20 நவம்பர் 2011 | 19:15 | ![]() |
44-17 | ![]() |
இறுதிப்போட்டி | பெண்கள் |
20 நவம்பர் 2011 | 22:15 | ![]() |
59-25 | ![]() |
இறுதிப்போட்டி | ஆண்கள் |
15 திசம்பர் 2012 | 20:00 | ![]() |
72-12 | ![]() |
இறுதிப்போட்டி | பெண்கள் |
15 திசம்பர் 2012 | 21:00 | ![]() |
59-25 | ![]() |
இறுதிப்போட்டி | ஆண்கள் |
14 திசம்பர் 2013 | 22:00 | ![]() |
48-39 | ![]() |
இறுதிப்போட்டி | ஆண்கள் |
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)