குருதிவளிக்காவி ஏ2 (Hemoglobin A2, ஈமோகுளோபின் ஏ2 (HbA2) என்பது ஈமோகுளோபின் ஏ-யினுடைய ஒரு சாதாரண மாறியாகும். இது இரண்டு ஆல்ஃபா மற்றும் இரண்டு டெல்டா (α2δ2) சங்கிலித்தொடர்களைப் பெற்றுள்ளது. இது மனிதக் குருதியில் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. பீட்டா தலஸ்ஸெமியா வகையினருக்கும், வெவ்வேறு பண்பு கொண்ட மரபணு இணைப்புக் கொண்டவர்களுக்கும், பீட்டா தலஸ்ஸெமியா மரபணு உடையவர்களுக்கும், ஹீமோகுளோபின் ஏ2வை அதிகரிப்பது நலம் பயக்கும்.
பிள்ளைப் பருவத்தைத் தாண்டிய முழுவளர்ச்சியடைந்த அனைத்து மனிதர்களுக்கும் HbA2 குறைந்த அளவு காணப்படுகிறது. அதாவது மொத்த ஈமோகுளோபின் அளவில் 1.5-3.1% ஈமோகுளோபின் மூலக்கூறுகள். அரிவாளணு நோய் உள்ளவர்களுக்கு இது சாதாரண அளவில் காணப்படுகிறது.[1] இதன் உயிரியல் முக்கியத்துவம் இதுவரை அறியப்படவில்லை.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)