குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை

குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை
ஆஃகன் சண்டையின் பகுதி
நாள் அக்டோபர் 8, 1944
இடம் 50°47′57.63″N 6°8′21.9″E / 50.7993417°N 6.139417°E / 50.7993417; 6.139417
ஆஃகன், ஜெர்மனி
அமெரிக்க வெற்றி
பிரிவினர்
 ஜெர்மனி  ஐக்கிய அமெரிக்கா
தளபதிகள், தலைவர்கள்
கெரார்ட் வில்க் ஹென்ரி ஜி. லென்னர்ட் இளையவர்

குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை (Battle of Crucifix Hill) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நேச நாடுகளுக்கும், நாசி ஜெர்மனிக்கும் நடந்த ஒரு சண்டை. இது சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதி. நாசி ஜெர்மனியின் ஆஃகன் நகரைச் சுற்றி வளைப்பதில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள் அந்நகர் அருகே இருந்த குன்று ஒன்றைத் தாக்கி கைப்பற்றின.

அக்டோபர் 1944ல் அமெரிக்கப் படைகள் ஆஃகன் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கின. நகரைச் சுற்றி வளைக்கும் முயற்சியின் பகுதியாக அதன் அருகிலிருந்த குன்றைக் கைப்பற்ற முயன்றன. அக்குன்றின் மீது சிலுவை ஒன்று நிறுவப்பட்டிருந்ததால் அது சிலுவைக் குன்று (Crucifix Hill) என்று அமெரிக்கப் படைகளால் அழைக்கப்படலாயிற்று. அரண்நிலைகள் நிறைந்த அக்குன்றை 246வது ஜெர்மானிய வோல்க்ஸ்கிரெனேடியர் டிவிசனைச் சேர்ந்த படைப்பிரிவுகள் பாதுகாத்து வந்தன. அமெரிகக 1வது தரைப்படை டிவிசனைச் சேர்ந்த 1வது பட்டாலியன், (18வது ரெஜிமண்ட்) அக்குன்றைத் தாக்கி அக்டோபர் 8, 1944ல் கைப்பற்றியது.