உருவாக்கம் | 1993 |
---|---|
நோக்கம் | அண்டவியல் மரபியல் நரம்பணுவியல் நீதி பெண்களின் உரிமைகள் |
தலைமையகம் |
|
மூலம் | பீட்டர் மற்றும் பாட்ரிசியா குரூபர் அறக்கட்டளை |
முக்கிய நபர்கள் | பாட்ரிசியா மற்றும் பீட்டர் குரூபர் (இணை-நிறுவனர்கள்) |
வருவாய் (2016) | $4,681,748[1] |
செலவுகள் (2016) | $3,291,482[1] |
வலைத்தளம் | gruber |
குரூபர் அறக்கட்டளை (Gruber Foundation) என்பது பீட்டர் மற்றும் பாட்ரிசியா குரூபர் ஆகியோரால் நிறுவப்பட்ட ஓர் உதவி அறக்கட்டளையாகும் , இது நி யூ ஏவன் கனெக்டிகட்டில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது.[2] அதன் நோக்கம் அண்டவியல்,, மரபியல், நரம்பியல், அறிவியல், நீதி, பெண்கள் உரிமைகள் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவதை மதித்து ஊக்குவிப்பதும் ஆகும். இது குரூபர் பரிசுகள், இளம் அறிவியலாளர் விருதுகள் , குரூபர் அறிவியல் நல்கைத் திட்டம , யேல் சட்டப் பள்ளியில் உலகளாவிய நீதி, பெண்கள் உரிமைகளுக்கான குரூபர் திட்டம் எனும் மூன்று முதன்மைத் திட்ட முன்முயற்சிகளை உள்ளடக்கியதாகும்..[3]
பன்னாட்டுப் பரிசுத் திட்டம் ஆண்டுதோறும் பின்வரும் குரூபர் பரிசுகளை வழங்குகிறது:
இந்தப் புலங்களில் முக்கிய அறிவியலாளர்கள், சமூக அறிவியலாளர்கள், சட்ட வல்லுநர்களுக்கு வழங்கப்படும் இப்பரிசுகள் தங்கப் பதக்கத்தையும் , 500,000 அமெரிக்க டாலர் காசுப் பரிசையும் வழங்குகின்றன.[7]
இளம் அறிவியலாளர், விருதுகள் திறமையான தொடக்க காலத் தொழில் வல்லமைக்காக பன்னாட்டு அறிவியலாள்களுக்கு முதன்மை அறிவியல் அமைப்புகளுடன் இணைந்து தேர்ந்தெடுத்து வழங்கப்படுகின்றன.
2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குரூபர் அறிவியல் உதவித்தொகை யேல் அறிவியல், கலைப் பட்டப்படிப்புப் பள்ளி வழங்கும் மிகவும் மதிப்புமிக்க விருதுகளாகும்.[10][11] ஆண்டுதோறும் சுமார் 20 பேர் மட்டுமே யேல் பல்கலைக்கழகத்தின் வாழ்க்கை அறிவியல் , அண்டவியல், வானியற்பியல் ஆகிய துறைகளில் முனைவர் பட்டப் படிப்பில் மிக உயர்ந்த தரவரிசை பெற்றவர்களுக்கு அவர்களின் சிறந்த சாதனைகள், விதிவிலக்கான வாக்குறுதிகளை ஏற்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன.[12] பங்கேற்கும் யேல் முனைவர் பட்டப் படிப்புகளில் பின்வருவன அடங்கும்.
யேல் சட்டப் பள்ளியால் நிர்வகிக்கப்படும் உலகளாவிய நீதி, பெண்கள் உரிமைகளுக்கான குரூபர் திட்டம் முந்தைய நீதி, பெண்கள் உரிமைகள் பரிசுகளின் பணிகளோடு தொடர்ந்து விரிவடைகிறது.[13] தற்போது இந்த திட்டம் நான்கு முதன்மைக் கூறுகளைக் கொண்டுள்ளது.