குரூபர் மரபியல் பரிசு (Gruber Prize in Genetics) 2001ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மரபியலில் கண்டுபிடிப்புகளுக்கான பன்னாட்டுப் பரிசாகும். இதனை கனெடிகட் நியூ ஹேவன் நகரில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தைத் தளமாகக் கொண்ட ஓர் இலாப நோக்கற்ற அமைப்பான குரூபர் அறக்கட்டளை நிறுவியது. இந்த விருதின் பரிசுத் தொகை 500,000 அமெரிக்க டாலர் ஆகும். குரூபர் அறக்கட்டளையால் நிறுவப்பட்ட மூன்று பன்னாட்டு விருதுகளில் இதுவும் ஒன்றாகும்.
மரபியல் ஆராய்ச்சித் துறையில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியதற்காக முன்னணி விஞ்ஞானிகளை மரபியல் பரிசு கவுரவிக்கிறது. அறக்கட்டளையின் பிற பன்னாட்டு விருதுகள் அண்டவியல், நரம்பியல், நீதி மற்றும் பெண்கள் உரிமைகள் ஆகியவற்றில் சாதனை புரிந்தவர்களுக்காக வழங்கப்படுகின்றன.
- 2001 ருடால்ப் ஜேனிசு[1]
- 2002 எச். இராபர்ட் ஹார்விட்சு[2]
- 2003 டேவிட் போட்சுடீன்
- 2004 மேரி கிளாரி கிங்[3]
- 2005 இராபர்ட் ஹக் வாட்டர்சுடன்[4]
- 2006 எலிசபெத் பிளாக்பர்ன், முனைக்கூறில் நிபுணத்துவம் பெற்ற உயிரணு உயிரியலாளர்
- 2007 வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் மேனார்ட் ஓல்சன், உயிர் தகவலியல் நிபுணர்
- 2008 ஆலன் சி. ஸ்ப்ராட்லிங், கார்னகி அறிவியல் நிறுவனம் மற்றும் ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ நிறுவனம், பால்டிமோர் பழ ஈ மரபியல் குறித்த பணிக்காக
- 2009 ஜேனட் ரௌலி, சிகாகோ பல்கலைக்கழகத்தில் பிளம்-ரீஸ் புகழ்பெற்ற சேவை பேராசிரியர் (சிகாகோ பல்கலைக்கழகம்)
- 2010 ஜெரால்ட் பிங்க், மார்கரெட் மற்றும் ஹெர்மன் சோகோல் பேராசிரியர் எம்ஐடி
- 2011 ரொனால்ட் டபிள்யூ டேவிசு, இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
- 2012 டக்ளசு சி. வாலசு
- 2013 ஸ்வாந்தே பாவ்போ
- 2014 விக்டர் அம்புரோசு, மாசசூசெட்சு பல்கலைக்கழகம் டேவிட் பால்கோம், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் மற்றும் கியரி உருவுக்குன், ஆர்வர்ட் பல்கலைக்கழகம்
- 2015 எமானுவேல் சார்ப்பெந்தியே, ஜெர்மனியில் தொற்று ஆராய்ச்சிக்கான ஹெல்ம்ஹோல்ட்சு மையம் மற்றும் செனிபர் தெளதுனா, கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி [5]
- 2016 மைக்கேல் க்ரன்ஸ்டீன், கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் (யு. சி. எல். ஏ.) மற்றும் சி. டேவிட் அல்லிஸ், ராக்பெல்லர் பல்கலைக்கழகம் [6]
- 2017 ஸ்டீபன் ஜே. எல்லெட்ஜ், ஆர்வர்டு மருத்துவப் பள்ளி [7]
- 2018 ஜோன் கோரி (உயிரியல் ஆய்வுகளுக்கான சால்க் நிறுவனம்) மற்றும் எலியட் மேயரோவிட்சு (கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்) [7]
- 2019 பெர்ட் வோகல்சுடீன் (ஜான்ஸ் ஹாப்கின்சு மருத்துவமனை, ஹோவர்ட் ஹியூசு மருத்துவ நிறுவனம்)
- 2020 போனி பாசுலர் (பிரின்செட்டன் பல்கலைக்கழகம், ஹோவர்ட் ஹியூசு மருத்துவ நிறுவனம்)
- 2021 ஸ்டூவர்ட் எச். ஆர்கின் (ஆர்வர்டு மருத்துவப் பள்ளி, ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ நிறுவனம்)
- 2022 ரூத் லெக்மன் (வைட்ஹெட் நிறுவனம் மற்றும் எம்ஐடி) ஜேம்சு பிரைசு (பிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்) மற்றும் ஜெரால்டின் சேடவுக்சு (ஜான்சு ஹாப்கின்சு பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி).[8]
- 2023 ஆலன் ஜேக்கப்ஸோன் (மாசசூசெட்ஸ் சான் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் லின் ஈ. மக்வாட் (ரோசெஸ்டர் மருத்துவப் பல்கலைக்கழகம்)
- மரபியல் விருதுகளின் பட்டியல்