![]() | |
---|---|
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
5-பியூட்-2-யீனைல்-5-யெத்தில்-1,3-ஈரசினேன்-2,4,6-டிரையோன் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 1952-67-6 ![]() |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 5364821 |
ChemSpider | 4516954 ![]() |
UNII | SXW2HL5JU7 ![]() |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C10 |
SMILES | eMolecules & PubChem |
குரோட்டைல்பார்பிட்டால் (Crotylbarbital) என்பது C10H14N2O3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு மருந்து ஆகும். பரோட்டால், மெப்பர்டேன், குரோட்டார்பிட்டால் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. பார்பிட்டியூரேட்டு வழிப்பெறுதியான இம்மருந்தை 1930 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவைச் சேர்ந்த எலி லில்லி என்ற மருந்து நிறுவனம் தயாரித்தது.[1] இது மயக்கம் மற்றும் ஆழ்துயில் விளைவுகளைக் கொண்டுள்ளது. இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மைக்கான சிகிச்சைக்காவும் பயன்படுத்தப்பட்டது.[2] குறைவான பக்கவிளைவுகள் மற்றும் குறைந்த அளவு அபாயம் ஆகிய அம்சங்களுடன் வந்த புதிய மாற்று மருந்துகளால் குரோட்டைல்பார்பிட்டால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டது.