பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(III) அசிட்டேட்டு ஐதரேட்டு
| |
வேறு பெயர்கள்
குரோமிக் அசிட்டேட்டு
குரோமியம் டிரை அசிட்டேட்டு குரோமியம்(III) எத்தனோயேட்டு | |
இனங்காட்டிகள் | |
32591-52-9 | |
ChemSpider | 13394 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14012 |
| |
பண்புகள் | |
C12H36ClCr3O22 | |
வாய்ப்பாட்டு எடை | 723.84 g·mol−1 |
தோற்றம் | சாம்பல்-பச்சை முதல் நீலப் பச்சை வரையிலான திண்மம் |
அடர்த்தி | 1.662 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,152[1] °C (2,106 °F; 1,425 K) |
-5104.0·10−6 செ,மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குரோமியம்(III) அசிட்டேட்டு (Chromium(III) acetate) என்பது C12H36ClCr3O22 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். பொதுவாக அடிப்படை குரோமியம் அசிட்டேட்டு என்று இது அழைக்கப்படுகிறது.[2] [Cr3O(O2CCH3)6(OH2)3]+ என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட நெர்மின் அயனியை கொண்ட உப்புக் குடும்பமாக குரோமியம்(III) அசிட்டேட்டு கருதப்படுகிறது. முக்குரோமியம் நேர்மின் அயனி குளோரைடு மற்றும் நைட்ரேட்டு போன்ற பல்வேறு எதிர்மின் அயனிகளுடன் வினைபுரிகிறது. மேலே உள்ள அட்டவணையில் உள்ள தரவு குளோரைடு அறுநீரேற்றுக்கானதாகும்.
அடிப்படை குரோமியம் அசிடேட்டின் உப்புகள் நீண்ட காலமாக அறிவியலாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளன. ஏனெனில் இதன் தனித்துவமான கட்டமைப்பு காரணமாகும். எண்முக Cr(III) மையங்கள், ஒரு மும்மடங்கு பாலமான ஆக்சோ ஈந்தணைவி, ஆறு அசிடேட்டு ஈந்தணைவிகள் மற்றும் மூன்று நீர் ஈந்தணைவிகள் இதன் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.[2] இதே அமைப்பு அடிப்படை இரும்பு அசிட்டேட்டு மற்றும் அடிப்படை மாங்கனீசு அசிட்டேட்டுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.[2][3] ஆக்சோ ஈந்தணைவி இடம்பெறாத ஓர் எளிய குரோமியம்(III) அசிட்டேட்டுக்கு சிறிய சான்றுகள் உள்ளன.[4] குரோமியம்(III) அசிட்டேட்டு நீலம்/சாம்பல்-பச்சை நிறத் தூளாகும். இது தண்ணீரில் கரையும். 1909 ஆம் ஆண்டு முதல் அதே அசல் நடைமுறையின்படி இன்னும் தயாரிக்கப்படுகிறது.[3][5]