பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
குரோமியம்(III) பெர்குளோரேட்டு; குரோமியம் முப்பெர்குளோரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13537-21-8 55147-94-9 | |
ChemSpider | 55552 21241320 |
EC number | 236-905-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 61644 12987845 |
| |
பண்புகள் | |
Cr(ClO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 350.3489 |
தோற்றம் | நீலப்பச்சை திண்மம் |
நீரிலி: 58 கி/100 மி.லி (25 °செல்சியசு) அறுநீரேற்று: 130 கி/100 மிலி (20 °செல்சியசு)[1] | |
கரைதிறன் | எத்தனால் கரைப்பானில் கரையும் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நஞ்சு |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குரோமியம்(III) பெர்குளோரேட்டு (Chromium(III) perchlorate) Cr(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீலப்பச்சை நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு அறுநீரேற்று வடிவில் Cr(ClO4)3·6H2O காணப்படுகிறது. குரோமியம்(III) பெர்குளோரேட்டு தண்ணீரில் கரையும்.
குரோமியம்(III) ஆக்சைடு அல்லது குரோமியம்(III) ஐதராக்சைடை பெர்குளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் குரோமியம்(III) பெர்குளோரேட்டைத் தயாரிக்கலாம்:
குரோமியம் பெர்குளோரேட்டின் நீரேற்றுகள் பல அறியப்படுகின்றன. அறுநீரேற்று Cr(ClO4)3·6H2O [1] மற்றும் நோனாநீரேற்று Cr(ClO4)3·9H2O போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்.[3] அனைத்து நீரேற்றுகளும் தண்ணீரில் கரையக்கூடியவையாகவும் நீலப்பச்சை நிறத்திலும் காணப்படுகின்றன.
குரோமியம்(III) பெர்குளோரேட்டு பொருத்தமான சூழ்நிலையில் NH3 உடன் வினைபுரிந்து ஆரஞ்சு நிற ஆறமீன் அணைவுச் சேர்மத்தை (Cr(ClO4)3·6NH3) உருவாக்கும். [4] Cr(ClO4)3(NH3)x என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்ட பிற சேர்மங்களும் அறியப்படுகின்றன. x = 3 ஆக இருக்கும் போது, இந்த சேர்மம் சிவப்பு நிறமாகவும், x = 4 அல்லது 5 ஆக இருக்கும் போது, இது ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும். [5] ஆறமீன் அணைவுச் சேர்மம் வெடிக்கும் தன்மையை கொண்டதாகும்.[5]
Cr(ClO4)3 ஐதரசீனுடன் சேர்ந்து வினைபுரிந்து ஊதா நிற Cr(ClO4)3·2N2H4 அணைவுச் சேர்மங்களையும் கொடுக்கிறது.
Cr(ClO4)3 யூரியாவுடன் சேர்ந்து வினைபுரிந்து Cr(ClO4)3·6CO(NH2)2 போன்ற அறுகோண வடிவமைப்பிலான அணைவுச் சேர்மங்களையும் கொடுக்கிறது.[6]