குர்சித் பானு | |
---|---|
ஹோலி (1940) திரைப்படத்தில் குர்சித் | |
பிறப்பு | இர்சாத் பேகம் 14 ஏப்ரல் 1914 லாகூர்,(பிரித்தானிய இந்தியா), தற்போது பாக்கித்தான் |
இறப்பு | 18 ஏப்ரல் 2001[1] கராச்சி, சிந்து மாகாணம், பாக்கித்தான் | (அகவை 87)
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1931 – 1956 |
வாழ்க்கைத் துணை | |
பிள்ளைகள் | 3 |
குர்சீத் பானு ( Khursheed Bano ) (14 ஏப்ரல் 1914 - 18 ஏப்ரல் 2001), பெரும்பாலும் குர்சீத் அல்லது குர்சித் என்று அழைக்கப்படும் இவர், ஓர் பாடகியும் , நடிகையும் மற்றும் இந்தியத் திரைப்படங்களின் முன்னோடியும் ஆவார்.[2] இவர் 1948 இல் பாக்கித்தானுக்கு குடிபெயர்வதற்கு முன்பு, 1930கள் மற்றும் 1940களில் இவர் திரைப்படங்களில் பணியாற்றினார்.[2] லைலா மஜ்னு (1931) திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், இந்தியாவில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளர்.[2] நடிகர்-பாடகர் கே. எல். சைகலுடன் சேர்ந்து இவர் நடித்த தான்சென் (1943) திரைப்படத்திற்காக இவர் மிகவும் பிரபலமானார். இதில் இவரது மறக்கமுடியாத பல பாடல்கள் இடம்பெற்றன.[3][4]
குர்ஷீத் 1914 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பாக்கித்தானின் இலாகூரில் இர்சாத் பேகமாக பிறந்தார்.[2][5] சிறுவயதில் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், அரசியல்வாதியுமான அல்லாமா இக்பால் வீட்டிற்கு அடுத்துள்ள பட்டி கேட் பகுதியில் வசித்து வந்தார்.[1]
குர்ஷித் 1931 இல் கொல்கத்தாவிலுள்ள மதன் தியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து ஆரம்பகால பேசும் படங்களில் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். லைலா மஜ்னு (1931), என்ற படத்தில் இவர் மிஸ் ஷெஹ்லா என்ற வேடத்தில் அறிமுகமானர். பிறகு இவர் இலாகூர் திரும்பினார்.
இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்த துணைக்கண்டத்தின் முதல் பேசும் திரைப்படமான ஆலம் ஆரா[6][7] மற்றும் அதே ஆண்டு வெளியான ஐ ஃபார் எ ஐ (1931) என்ற ஊமைத் திரைப்படத்திலும் இவர் பணியாற்றினார்.[2] இலாகூரில் வளர்ந்து வரும் திரைப்பட அரங்கமான ஹிந்த்மாதா சினிடோன் திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்தார். இந்த பதாகையின் கீழ் இஷ்க்-இ-பஞ்சாப் என்கிற மிர்சா சாஹிபானி (1935) என்ற முதல் பஞ்சாபி பேசும் படத்தில் தோன்றினார். அதே ஆண்டில், இவர் நேஷனல் மூவிடோனின் ஸ்வர்க் கி சீதி (1935) படத்தில் உம்ராசியா பேகத்துடன் பிருதிவிராஜ் கபூருக்கு இணையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், தனது நடிப்பிற்காக பெரும் பாராட்டைப் பெற்றார்.[5] பின்னர் மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கு மகாலட்சுமி சினிடோன் நிறுவனத்தின் பாம்ப்ஷெல் (1935) மற்றும் சிராக்-இ-ஹுஸ்ன் (1935) ஆகிய படங்களில் பணிபுரிந்த பிறகு, குர்சீத் சரோஜ் மூவிடோனின் கைபி சிதாரா (1935) படத்தில் நடித்தார். இதில் இவர் அனைத்து பாடல்களையும் பாடினார். துரதிர்ஷ்டவசமாக இந்தப் பாடல்களின் பதிவுகள் இன்று கிடைக்கவில்லை.
இந்தியாவில் இவரது கடைசி படம் பபீஹா ரே (1948), இது ஒரு பெரிய வெற்றியாக இருந்தது.[2] குர்ஷித், 1948 இல், சுதந்திரத்திற்குப் பிறகு பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். தனது கணவருடன், பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் குடியேறினார்.[1]
1956 இல் ஃபன்கர் மற்றும் மண்டி ஆகிய இரண்டு படங்களில் பணியாற்றினார்.[2] இரபீக் கசுனவியின் இசையில் படம் வெளியானாலும் சரியான வெற்றியைப் பெறவில்லை.[2] கராச்சியில் உள்ள செயின்ட் பால்ஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியரான ராபர்ட் மாலிக் தயாரித்த இரண்டாவது படமான ஃபன்கர் என்ற படமும் வெற்றி பெறவில்லை.[1]
குர்ஷீத் தனது மேலாளர் லாலா யாகூப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் கர்தார் புரொடக்ஷன்ஸின் குறுகிய கால நடிகராகவும், பாக்கித்தானின் இலாகூரில் உள்ள பதி கேட் குழுமத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[8] தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக, குர்சித் 1956 இல் யாகூப்பை விவாகரத்து செய்தார். பின்னர், கப்பல்களில் சரக்கு வணிகத்தில் ஈடுபட்டிருந்த யூசுப் பாய் மியான் என்பவரை 1956ல் திருமணம் செய்து கொண்டார்.[2] இவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர் . மேலும், 1956 க்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்டார்.[1]
குர்ஷித் பானு தனது 87 வது பிறந்தநாளுக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு 18 ஏப்ரல் 2001 அன்று பாக்கித்தானின் கராச்சியில் இறந்தார்.[1]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite book}}
: Unknown parameter |coauthors=
ignored (help)