குர்ச்சடோவ் விருது அல்லது இகோர் குர்ச்சடோவ் தங்க விருது என்பது அணுஆற்றல் மற்றும் அணு இயற்பியல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கும் ஒரு விருது ஆகும். இந்த விருது இகோர் குர்ச்சடோவ் தனது வாழ்நாளில் அணுஆற்றல், அணு இயற்பியல் மற்றும் அணு பொறியியல் ஆகிய துறைகளில் அவர் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், சோவியத் அறிவியல் அகாடமியால் நிறுவப்பட்டது ஆகும். இந்த விருது பிப்ரவரி 9, 1960 ல் தொடங்கப்பட்டது.
சோவியத் ஒன்றியம் 1962 முதல் இவ்விருதுகளை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கொரு முறை தொடர்ந்து வழங்கி வந்தது.1989 முதல் இவ்விருதின் ஒரு பகுதியாக மதிப்பூதியம் சேர்க்கப்பட்டுள்ளது. பின்னர் 1998 முதல் உருசியா, குர்ச்சடோவ் தங்கப்பதக்கத்தை மீண்டும் வழங்கி வருகிறது.