குர்பத்வந்த் சிங் பன்னூன் | |
---|---|
பிறப்பு | கான்கோட் கிராமம், அமிர்தசரஸ், பஞ்சாப், இந்தியா |
பணி | வழக்கறிஞர் |
அமைப்பு(கள்) | நீதிக்கான சீக்கியர்கள் (SFJ) |
அறியப்படுவது | பஞ்சாப் மற்றும் இந்தியாவின் பல அண்டை பகுதிகளில் இருந்து காலிஸ்தான் என்று அழைக்கப்படும் மத அடிப்படையிலான சீக்கிய தேசத்தை உருவாக்குவதை ஊக்குவித்தல் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சீக்கியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்காக இந்திய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தல், இந்தியா, இந்தியர்கள் மற்றும் தூதர்களின் நேர்மையை சேதப்படுத்தும் காணொளிகள் வெளியிடுதல் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுதல் |
குர்பத்வந்த் சிங் பன்னூன் (Gurpatwant Singh Pannun) கனடா வாழ் இந்தியா வம்சாளி சீக்கிய வழக்கறிஞரும், காலிஸ்தான் இயக்கத்தின் ஒரு அமைப்பான நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் ஆவார். பஞ்சாப், இந்தியா மற்றும் பஞ்சாப், பாகிஸ்தான் பகுதிகளை இணைத்து சீக்கியர்களுக்கு காலிஸ்தான் எனும் தனி நாடு கோருவதே இவரின் கோரிக்கை ஆகும்.[1]இவர் நீதிக்கான சீக்கிய அமைப்பின் சட்ட ஆலோசகர் மற்றும் செய்தித் தொடர்பாளரும் ஆவார்.[2]சூலை 2020 இந்திய இந்திய உள்துறை அமைச்சகம் சூலை 2020ல் இந்தியாவில் தனி நாடு கோரும் அமைப்பைச் சேர்ந்தவர்களின் பட்டியலை பன்னாட்டுக் காவல்துறை அறிவிப்பு மூலம் வெளியிட்டது. அதில் குர்பத்வந்த் சிங் பன்னூன் பெயரும் இருந்தது.[3]
குர்பத்வந்த் சிங் பன்னூன் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரத்தின் அருகே உள்ள கான்கோட் கிராமத்தில் உள்ளது.[4][5]சட்டம் பயின்ற குர்பத்வந்த் சிங் பன்னூன், சீக்கியர்களுக்கான காலிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்காக கனடா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வாழும் சீக்கியர்களிடையே சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் காலிச்தானி சீக்கியர்களுக்கு எதிரான வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வாதடுவதை வழக்கமாக கொண்டவர்.[6][7][8]
இந்தியாவில் சீக்கிய தீவிரவாத நிகழ்வுகளுக்கு காரணமானவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் என இந்திய அரசு குற்றம் சாட்டியது. ஏப்ரல் 2023ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அசாம் சென்ற போது, குர்பத்வந்த் சிங் பன்னூன் வெளியிட்ட அச்சுறுத்தல் காணொலி வெளியிட்டார்.[9]சூன் 2023ல் இரண்டு மாதங்களில் மூன்று முக்கிய காலிஸ்தான் இயக்கத் தலைவர்களை கொன்ற பின் குர்பத்வந்த் சிங் பன்னூன் தலைமறைவானான்.[9]
சூலை 2023ல் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய அரசின் தூதரக அதிகாரிகளை ஐ. நா. அலுவலகம் அருகில் சுட்டுக் கொன்றதை காணொலியாக வெளியிட்டார்.[10]
குர்பத்வந்த் சிங் பன்னூன், செப்டம்பர் 2023ல் கனடா வாழ் இந்து சமயத்தவர்களை கனடாவை விட்டு வெளியேற எச்சரித்து காணொலி வெளியிட்டார்.[11][12][13][14][15]
2020ல் இந்திய அரசு உபா சட்டத்தின் கீழ் குர்பத்வந்த் சிங் பன்னூனை அறிவிக்கப்பட்ட தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.[16] இந்திய பஞ்சாப் மாநிலத்தில் தனி காலிஸ்தான் நாடு கோரியதற்கு பன்னூன் மீது 3 அரசதுரோகம் வழக்கு உள்பட 22 குற்ற வழக்குகள் உள்ளது. [17]அக்டோபர் 2022ல் பன்னாட்டுக் காவலகம் பன்னூன் மீதான இரண்டாவது பன்னாட்டுக் காவல்துறை அறிவிப்பை ஏற்க மறுத்தது.[18][19][20][21]
Sikhs for Justice (SFJ), a pro-Khalistan organisation banned in India in 2019, has threatened Hindus of Indian origin and asked them to leave Canada for supporting the country of their origin and "promoting violence" by celebrating Khalistani leader Hardeep Singh Nijjar's killing.
Gurpatwant Singh Pannu, Nijjar's lawyer, questioned Indian Canadians' loyalty to Canada in a video that has gone viral on social media. "Indo-Hindu leave Canada; go to India. You not only support India, but you are also supporting the suppression of speech and expression of pro-Khalistan Sikhs," he says in the video.