குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட உலகாளவிய பயரங்கவாதி (Specially Designated Global Terrorist (SDGT) ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அல்லது நிதித் துறையால் குறிப்பிட்டு அறிவிக்கப்படும் தீவிரவாதி அல்லது தீவிரவாத அமைப்பாகும்.[1][2]11 செப்டம்பர் 2001 இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னர் ஒரு நபர் அல்லது அமைப்பை குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட உலகாளவிய பயரங்கவாதி அல்லது அமைப்பாக அறிவிப்பதற்கு 23 செப்டம்பர் 2001 அன்று அமெரிக்க அதிபர் நிர்வாக ஆணை எண் 13224 வெளியிட்டார்.[3]இந்த ஆணையில் 2 சூலை 2002 மற்றும் 23 சனவரி 2003 அன்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ் திருத்தம் மேற்கொண்டார்.[1][2]
அமெரிக்க அதிபரின் நிர்வாக ஆணை 13224ன் கீழ் 4 டிசம்பர் 2001 அன்று தடைசெய்யப்பட்ட முதல் அமைப்பு அமெரிக்காவில் செயல்பட்ட பாலஸ்தீன புனித நாடு அறக்கட்டளை ஆகும். அமெரிக்காவின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம், பயங்கரவாதச் செயல்களைச் செய்ததாக அல்லது குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தியதாகக் கண்டறியப்படும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் அல்லது பயங்கரவாதத்திற்கு நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவளிப்பவர்கள், சேவைகள் அல்லது உதவிகளை வழங்குபவர்களின் அனைத்து உடைமைகளை பறிமுதல் செய்வர். மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள், அத்துடன் தொடர்புடைய நபர்கள், துணை நிறுவனங்கள், முன்னணி நிறுவனங்கள், முகவர்கள் அல்லது கூட்டாளிகளின் சொத்துகளை அமெரிக்க வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் கையகப்படுத்தும்.
அமெரிக்காவின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம், குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு தீவிரவாதிகள்/அமைப்புகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும்.[4]அப்பட்டியலில் குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட உலகாளவிய பயரங்கவாதிகள்/அமைப்புகளின் பெயர் இடம் பெறும்.[2][5]
சூன் 2023 அன்று 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்களுக்கு தொடர்புடைய லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தீவிரவாதியான சஜித் மீர் என்பவரை குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட உலகாளவிய பயரங்கவாதிகள் பட்டியலில் சேர்க்கக் கோரி இந்தியாவும், அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் வலியுறுத்திய போது சீனா அதனை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தது.[6].