குற்றப்பத்திரிக்கை (chargesheet), தண்டனைக்குரிய குற்றச் செயலுக்கு காவல் நிலைய அலுவலரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 173 (2) படி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக பதியப்படும் விரிவான அறிக்கை ஆகும்.[1][2][3]
குற்றப்பத்திரிகை காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாருக்கு எதிராக விசாரணைக்கு போதுமான ஆதாரம் உள்ளது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கிறது. குற்றச்சாட்டுகளை உருவாக்குவதற்கான உத்தரவை நீதிமன்றம் அறிவித்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகள் நீதித்துறை அமைப்பில் தொடங்குகிறது.[4]
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கையைத் தொடங்கும் முக்கியமான அறிக்கை ஆகும். குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் இடம் பெற்றிருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விரிவாக கூறப்பட்டிருக்கும். இது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் பெற ஓரளவு உதவுகிறது. குற்றப்பத்திரிகை இல்லாமல் நீதிமன்றத்தால் குற்றவியல் விசாரணை தொடங்க முடியாது.
இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 173 (2) இன் படி குற்றப்பத்திரிகையின் உள்ளடக்கங்கள் பின்வருமாறு:
மேலே குறிப்பிட்டுள்ள குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் கொடுக்க உரிமை உண்டு.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் துன்புறுத்துவதற்காகப் பதிவுசெய்யப்பட்ட பொய் வழக்குகள், சில வெறுப்பின் காரணமாகப் பதிவுசெய்யப்பட்ட பொய் வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு வெளியே வருவதற்கு விதிகள் உள்ளன. இதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தை அணுகி, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 483 இன் கீழ் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலம் பின்வரும் காரணங்களுக்காக உள்ளார்ந்த அதிகார வரம்பைப் பயன்படுத்தி உயர் நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர்களைத் துன்புறுத்துவதற்காக மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கருதும் போதும், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத நிலையிலும், அடையாளம் காண முடியாத குற்றத்திற்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் போதும், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை குற்றப்பத்திரிகையில் தவறாக பதியும் போதும் குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்யலாம்.
Snippet: ... The charge-sheet is nothing but a final report of police officer under Section 173(2) of the Cr.P.C. ... This report is intimation to the magistrate that upon investigation into a cognizable offence, the Investigation Officer has been able to procure sufficient evidence for the court to inquire into the offence and the necessary information is being sent to the court. In fact, the report under Section 173(2), purports to be an opinion of the Investigating Officer that as far as he is concerned he has been able to procure sufficient material for the trial of the accused by the Court. ...