குலங்களின் நேர்ப் பெருக்கம் (direct product of groups) என்பது குலக்கோட்பாட்டில் குலங்களுக்கிடையே நிகழும் ஒரு செயலி. G , H எனும் இரு குலங்களுக்கிடையே இச்செயலியைப் பயன்படுத்தக் கிடைக்கும் முடிவு ஒரு புதுக் குலமாக (G × H) இருக்கும். கணங்களில் வரையறுக்கபட்டுள்ள கார்ட்டீசியன் பெருக்கல் என்ற செயலிக்கு ஒத்தசெயலியாக இது குலங்களில் உள்ளது.
ஏபெல் குலங்களில் இப்பெருக்கம் சிலசமயங்களில் நேர்க் கூட்டல் (G ⊕ H) எனக் குறிப்பிடப்படுகிறது . ஏபெல் குலங்களை வகைப்படுத்துவதில் நேர்க் கூட்டல் முக்கியப் பங்குவகிக்கிறது. முடிவுறு ஏபெல் குலங்களின் வரையறைப்படி, ஒவ்வொரு முடிவுறு ஏபெல் குலத்தையும் இரு சுழற் குலங்களின் நேர் கூட்டலாகக் காணமுடியும்.
தரப்பட்ட இரு குலங்கள் G, H எனில் அவற்றின் நேர்ப் பெருக்கம் G × H பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
(g1, h1) · (g2, h2) = (g1·g2, h1·h2) என வரையறுக்கப்படும் ஈருறுப்புச் செயலியைப் பொறுத்து G × H இல் குலங்களின் பண்புகள் நிறைவு செய்யப்படுவதால் அது ஒரு குலமாகிறது:
சேர்ப்பு விதி
G × H இல் வரையறுக்கப்பட்ட இந்த ஈருறுப்புச் செயலி சேர்ப்புத்தன்மை உடையது
முற்றொருமை உறுப்பு
இக்குலத்தின் முற்றொருமை உறுப்பு(1G, 1H). இதில் 1G, G இன் முற்றொருமை உறுப்பு; 1H, H இன் முற்றொருமை உறுப்பு.