குலசிங்கம் திலீபன் Kulasingam Dhileeban | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் ஆகத்து 2020 – செப்டெம்பர் 2024 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | குலசிங்கம் திலீபன் 22 மே 1979 |
அரசியல் கட்சி | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
வாழிடம்(s) | தவசிக்குளம் வீதி, மதவுவைத்தகுளம், வவுனியா |
குலசிங்கம் திலீபன் (Kulasingam Dhileeban, பிறப்பு: 22 மே 1979) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
குலசிங்கம் திலீபன் 1979 மே 22 இல் பிறந்தார்.[1]
குலசிங்கம் திலீபன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும், அக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் ஆவார். இவர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார்.[2] வன்னி மாவட்டத்தில் இவரது கட்சியில் இருந்து எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[3][4] இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டு 3,203 வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[5][6][7]
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | |
---|---|---|---|---|---|---|
2015 நாடாளுமன்றம் | வன்னி மாவட்டம் | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | இல்லை | தெரிவு செய்யப்படவில்லை | ||
2020 நாடாளுமன்றம்[6] | வன்னி மாவட்டம் | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | இல்லை | 3,203 | தெரிவு |