குலாம் உசேன் சலீம் (Ghulam Husain Salim) ஒரு வரலாற்றாளர் ஆவார். இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு ஜார்ஜ் உட்னி (கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகக் குடியுரிமை) கீழ் பணியாற்றிய ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் அஞ்சல் அலுவலராக பணியாற்றினார். உட்னியின் வேண்டுகோளின் பேரில், வங்காளத்தின் வரலாற்றை இரியாசு-உசு-சலாதின் என்ற தலைப்பில் இயற்றினார். இது 1787-88 இல் முடிக்கப்பட்டது. இவர் 1817-18 இல் இறந்தார். [1]