குலாம் முகமது கவுஸ் கான் பகதூர்

குலாம் முஹம்மது கவுஸ் கான்

குலாம் முகமது கவுஸ் கான் (Ghulam Muhammad Ghouse Khan, 1824 – 7 அக்டோபர் 1855) என்பவர் ஆற்காட்டின் 12வது மற்றும் கடைசி நவாப் ஆவார். 1825 முதல் 1855 வரை ஆட்சி செய்த இவர் இரண்டாம் வம்சத்தைச் சேர்ந்தவர்.

துவக்கக் கால வாழ்க்கை

[தொகு]

கவுஸ் கான் 1824 இல் ஆற்காட்டின் பதினொன்றாவது நவாப்பான ஆசாம் ஜாவுக்குப் பிறந்தார். இவருக்கு ஒரு வயதாக இருந்தபோது இவரது தந்தை இறந்துவிட்டார். 1825 ஆம் ஆண்டில், கவுஸ் கானின் மாமாவும் அரச பிரதிநிதியுமான அஜிம் ஜாவால் அரசராக அறிவிக்கப்பட்டார்.

ஆட்சி

[தொகு]

1825 ஆம் ஆண்டில், கவுஸ் கான் அரச பிரதிநிதியான அசிம் ஜாவால் அரசராக அறிவிக்கப்பட்டார். இவர் 1825 முதல் 1842 வரை ஆட்சி செய்தார். 1825 முதல் 1842 வரை வைஸ்ராய் எல்பின்ஸ்டோன் பிரபுவால் ஆற்காடு நவாப்பாக அங்கீகரிக்கபட்டபோது அசிம் ஜா இளம் மன்னருக்கு அரசப் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.

இவரது ஆட்சியின் போது, மதராசில் முகமதன் பொது நூலகத்தையும், லங்கார் கானா என்றழைக்கப்படும் ஒரு சத்திரத்தையையும் நிறுவினார். லங்கார் கானாவில் இப்போது முசுலிம் கைம்பெண்கள் சங்கம் உள்ளது.

இறப்பு

[தொகு]

கவுஸ் கான் 1855 இல் தனது 31 வயதில் இறந்தார். இவருக்கு ஆண் வாரிசு இருக்கவில்லை. அரியணைக்கு வரக்கூடிய ஒரே வாரிசான தன்னை அரசராக நியமிக்கவேண்டி கவுஸ் கானின் மாமா அசிம் ஜாவின் கோரிக்கை ஒதுக்கி வைக்கப்பட்டு, அவகாசியிலிக் கொள்கையின்படி இராச்சியம் முறையாக பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடி ஆட்சிப் பகுதியுடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]