குலாலை இஸ்மாயில் (Gulalai Ismail பஷ்தூ: ګلالۍ اسماعیل , உருது: گلالئی اسماعیل ; பிறப்பு. 1986) [1] பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்த பஷ்தூன் மனித உரிமை ஆர்வலர் ஆவார். இவர் அவேர் கேர்ள்ஸின் தலைவராகவும், சர்வதேச மனிதநேய செயல்பாட்டளர்களுக்கான உலகளாவிய தூதராகவும் உள்ளார். சர்வதேச அளவில் நடைபெறும் மாநாடுகளில் அமைதி மற்றும் பெண்களின் அதிகாரம் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் பேசி வருகிறார். சர்வதேச மனிதநேய மற்றும் நெறிமுறை சங்கத்தின் மனிதநேய விருது மற்றும் மோதல் தடுப்புக்கான ஃபண்டேஷன் சிராக் அமைதி பரிசு பெற்றவர். அவர் பஷ்தூன் தஹஃபஸ் இயக்கத்தில் (PTM) பஷ்தூன் மனித உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்யும் ஆர்வலராக உள்ளார்.
2019 ஆம் ஆண்டில், பாக்கிஸ்தானிய இராணுவத்தால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் காணாமல் போகச் செய்தலுக்கு எதிராக பேசியதற்காக உயிருக்கு பயந்து இஸ்மாயில் பாகிஸ்தானிலிருந்து தப்பி அமெரிக்கா சென்றார். [2] மார்ச் 2021 இல், அவர் மனிதநேய சர்வதேசத்தின் உலகளாவிய தூதராக ஆனார்.[3]
இஸ்மாயில் சுவாபியில் பிறந்தார். தனக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது பாக்கித்தானில் உள்ள பெசாவர் சென்றார்.இவரது தந்தை முகமது இஸ்மாயில், ஆசிரியர் அம்ற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இவர் சிறுவயது முதலே பெண்களுக்கான உரிமைகள், பாலின வேறுபாடு ஆகியன குறித்து போதிக்கப்பட்டார். 2012ஆம் ஆண்டில் இஸ்லாமாபாத்தில் உள்ள குவைத்-இ-அசாம் பலகலைககழகத்தில் உயிரி தொழில்நுட்பவியலில் இவர் முதுகலைப் பட்டம் பெற்றார். தனது 16ஆம் வயதில் அவேர் கேர்ள்ஸ் எனும் தொண்டு நிறுவனத்தை தனது சகோதரிசபா இஸ்மாயிலுடன் இணைந்து துவங்கினார். பாக்கித்தானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் கிராமப்புறப் பகுதியில் உள்ள பெணக்ளுக்கு எதிரான வன்முறைகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதற்காக இந்த நிறுவனத்தை இவர்கள் ஆரம்பித்தாக 2011ஆம் ஆண்டில் ஒரு நேர்காணலில் இவர் தெரிவித்தார்.
இஸ்மாயில் 2009 யூத் ஆக்சன் நெட் ஆய்வுதவித் தொகையினை வென்றார்.
2013 ஆம் ஆண்டில், அவர் மக்களாட்சி விருதினை தேசிய மக்களாட்சி அறக்கட்டளையிடமிருந்து பெற்றார். ஃபாரின் பாலிசி எனும் இதழால் 2013 ஆம் ஆண்டின் 100 முன்னணி உலகளாவிய சிந்தனையாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார். [4]
ஆகஸ்ட் 2014 இல், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் நடந்த உலக மனிதநேய மாநாட்டில் மனிதநேய செயற்பாட்டளர் அமைப்பினால் சர்வதேச மனிதநேய விருது வழங்கப்பட்டது. [5] இவர் 2017 ஆம் ஆண்டில் சர்வதேச மனிதநேய செயற்பாட்டாளர்களின் இயக்குநர்கள் குழுமத்திற்கு தேர்வானார். [6] 2021 இல், அவர் மனிதநேய சர்வதேசத்தின் முதல் தூதராக நியமிக்கப்பட்டார். [7]
மகளிர் தன்மேம்பாடு பெறுதலுக்கான இவரது முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, மக்களாட்சி மற்றும் மனித உரிமைகள் என்ற கருப்பொருளின் கீழ், 2015 ஆசிய பிராந்திய காமன்வெல்த் இளைஞர் விருதைப் பெற்றார். [8] [9]
2016 ஆம் ஆண்டில், ஃபண்டேஷன் சிராக் அவேர் கேர்ள்ஸ் நிறுவனத்திற்கு மோதல் தடுப்புக்கான அமைதி பரிசு வழங்கியது. இது இஸ்மாயிலுக்கு அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஆலந்திடமிருந்து வழங்கப்பட்டது. [10] [11]
2017 ஆம் ஆண்டில்,மத தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்காக இஸ்மாயில், கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரும், ஆர்வலருமான கௌரி லங்கேசுடன் இணைந்து அண்ணா போலிட்கோவ்ஸ்கயா விருது பெற்றார். [1]