பிரிகேடியர் குல்தீப் சிங் சந்த்புரி | |
---|---|
பிறப்பு | மோண்ட்கோமாரி, சாகிவால் மாவட்டம், பஞ்சாப், பாகிஸ்தான் | 22 நவம்பர் 1940
இறப்பு | 17 நவம்பர் 2018[1] மொகாலி, பஞ்சாப், இந்தியா | (அகவை 77)
சார்பு | இந்தியா |
சேவை/ | இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 1963-1996 |
தரம் | பிரிகேடியர் |
படைப்பிரிவு | பஞ்சாப் படைப்பிரிவு |
போர்கள்/யுத்தங்கள் | இந்தியா-பாகிஸ்தான் போர், 1965 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் லோங்கேவாலா சண்டை |
விருதுகள் | மகா வீர சக்கரம் விசிட்ட சேவா பதக்கம் |
பிரிகேடியர் குல்தீப் சிங் சந்த்புரி (Kuldip Singh Chandpuri') MVC, VSM (22 நவம்பர் 1940 – 17 நவம்பர் 2018) இந்தியத் தரைப்படையின் இராணுவ அதிகாரி ஆவார்.[2]1971 இந்திய-பாகிஸ்தான் போரின் ஒரு பகுதியாக நடைபெற்ற லோங்கேவாலா சண்டையின் போது குல்தீப் சிங் சந்த்புரி காட்டிய வீரதீர செயல்களுக்காக மகா வீர சக்கரம் பெற்றவர். பிரிகேடியராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற குல்தீப் சிங் சந்த்புரி தமது 78வது அகவையில் புற்று நோயால் மறைந்தார்.[3] குல்தீப் சிங் சந்த்புரியின் வீரதீரச் செயல்களை நினைவு கூறும் வகையில் பார்டர் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.