குளக்கோட்டன் | |
---|---|
Sculpture of Kulakkottan | |
ஆட்சிக்காலம் | Unknown |
முன்னையவர் | வீர இராமதேவன் |
பின்னையவர் | Unknown |
பிறப்பு | Unknown |
இறப்பு | Unknown |
துணைவர் | ஆடக சவுந்தரி |
குழந்தைகளின் பெயர்கள் | Unknown |
அரசமரபு | சோழர் |
தந்தை | வீர இராமதேவன்[1] |
சோழகங்க தேவன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த குளக்கோட்டன் இலங்கையின் கிழக்குப்பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னனாவான். திருக்கோணேச்சரம் ஆலயத்துக்குத் திருப்பணி செய்தவன் என்று குறிப்பிடப்படுகிறான். இவனைப் பற்றிய குறிப்பு கோணேசர் கல்வெட்டிலும் வருகிறது.
தட்சணகைலாய புராணம் குளக்கோட்டன் பணிகளை பற்றி கூறுகிறது.இவன் விமானம், எழில் மிகு மண்டபம், கோபுரம் ஆகியன பொருந்திய மகத்தான மண்டபத்தையும். மழை நீரை தேக்கும் பாவநாசம் என்னும் அணையினையும் குளக்கோட்டன் என்ற சோழ கங்க தேவன் அமைத்தான் என்று கூறுகிறது.
கோணேசர் கல்வெட்டில் குளக்கோட்டன் இந்து ஆலயக்கிரியைக்கு வயல்களை வழங்கியதுடன் அவ்வயல்களுக்கு நீர் கிடைக்க கந்தளாய் குளம், அல்லை குளம், வெண்டரசன் குளம், என்பவற்றையும் வெட்டிக் கொடுத்தான் என கூறுகிறது.[2]
இவனது மனைவி பெயர் ஆடக சவுந்தரி ஆகும். அவளது கட்டளையில் இருந்த பூதங்களை கொண்டே மன்னவன் கந்தளாய் குளம் கட்டினான் என்பது சரித்திரம்.