வலைத்தள வகை | நிலப்பட உலாவி |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகள் |
உரிமையாளர் | கூகுள் |
உருவாக்கியவர் | கூகுள் |
வருவாய் | இலாப நோக்கற்றது |
பதிவு செய்தல் | இல்லை |
தற்போதைய நிலை | சேவையில் உள்ளது |
உரலி | moon.google.com |
கூகுள் நிலா அல்லது கூகுள் மூன் (Google Moon) என்பது கூகுள் நிலப்படங்கள் போன்று நிலா கோளினை செய்மதிப் பார்வை மூலம் பார்க்க உதவும் இணையதளம் ஆகும். இதில் நிலவின் முன்புறத்தோற்றம் (Elevation), நேரடித்தோற்றம் மற்றும் அப்பல்லோ ஓடத்தின் வழியான தோற்றங்களைக் காணலாம். இது முதன் முதலில் 2005ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 20ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இச்சேவையினை பிரபல இணையம் மற்றும் மென்பொருள் நிறுவனமான கூகுள் நிறுவனம் நாசா (செய்மதி உதவி) நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக வழங்குகிறது. இவ்வசதி தற்போது கூகுள் புவியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |