கூடாட் (P167) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Kudat (P167) Federal Constituency in Sabah | |
![]() கூடாட் மக்களவைத் தொகுதி (P167 Kudat) | |
மாவட்டம் | கூடாட் மாவட்டம்; கூடாட் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 75,724 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கூடாட் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கூடாட் |
பரப்பளவு | 2,300 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | சுயேச்சை |
மக்களவை உறுப்பினர் | வெர்டோன் பகாண்டா (Verdon Bahanda) |
மக்கள் தொகை | 92,554 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கூடாட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kudat; ஆங்கிலம்: Kudat Federal Constituency; சீனம்: 古达国会议席) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் கூடாட் பிரிவின், கூடாட் மாவட்டம்; கோத்தா மருடு மாவட்டம்; பித்தாசு மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P167) ஆகும்.[5]
கூடாட் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து கூடாட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
கூடாட் பிரிவு என்பது சபா மாநிலத்தில் ஒரு நிர்வாகப் பிரிவாகும். கிழக்கு மலேசியாவின் சபா; சரவாக் மாநிலங்களில், பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.
கூடாட் பிரிவு, சபா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 4,623 சதுர கிலோமீட்டர்கள் (சபாவின் மொத்த நிலப்பரப்பில் 6.3%). இந்தப் பிரிவு சபாவின் ஐந்து பிரிவுகளில் மிகச் சிறிய பிரிவாகும்.
கூடாட் பிரிவில் உள்ள மிகப்பெரிய நகரம் கூடாட். இதுவே முக்கியப் போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது. கூடாட் நகரத்தின் துறைமுகம் வழியாகக் கூடாட் பிரிவுக்கு ஏற்றுமதி இறக்குமதிச் சரக்குகள் கொண்டு செல்லப் படுகின்றன. இந்தப் பிரிவில் கூடாட் வானூர்தி நிலையம் எனும் ஒரே ஒரு வானூர்தி நிலையம் மட்டுமே உள்ளது.
கூடாட் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7]
கூடாட் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)
கூடாட் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)
கூடாட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கூடாட் தொகுதி 2003-ஆம் ஆண்டில் மருடு தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P167 | 2004-2008 | அப்துல் ரகீம் பக்ரி (Abd Rahim Bakri) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018-2019 | சுயேச்சை | |||
2019-2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |||
2020–2022 | சபா மக்கள் கூட்டணி (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | வெர்டோன் பகாண்டா (Verdon Bahanda) |
சுயேச்சை |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
வெர்டோன் பகாண்டா (Verdon Bahanda) | சுயேச்சை (Independent) | 16,323 | 36.19 | 35.62 ![]() | |
ரூடி அவா (Ruddy Awah) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 14,356 | 31.83 | 31.33 ![]() | |
அப்துல் ரசீட் அப்துல் அருண் (Abdul Rashid Abdul Harun) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 9,421 | 20.89 | 25.68 ▼ | |
தோனி சி (Thonny Chee) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 4,726 | 10.48 | 10.31 ![]() | |
நூர் அல்யா உமைரா உசுன் (Nur Alya Humaira Usun) | தாயக இயக்கம் (GTA) | 282 | 0.63 | 0.62 ![]() | |
மொத்தம் | 45,108 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 45,108 | 97.94 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 948 | 2.06 | |||
மொத்த வாக்குகள் | 46,056 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 75,724 | 59.57 | 13.55 ▼ | ||
Majority | 1,967 | 4.29 | 0.63 ![]() | ||
சுயேச்சை கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)