கூத்தூர் ராமகிருஷ்ணன் சீனிவாசன் | |
---|---|
பிறப்பு | 1910 திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 1992 திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா |
பணி | தொல்பொருள் ஆராய்ச்சியாளர், வரலாற்றாசிரியர் |
அறியப்படுவது | மாமல்லபுரத்தின் குகைக் கோயில்கள் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் எழுத்துக்கள் |
விருதுகள் |
|
கூத்தூர் ராமகிருஷ்ணன் சீனிவாசன் (1910-1992) ஓர் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர், வரலாற்றாசிரியர் மற்றும் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த பல புத்தகங்களை எழுதியவர். மாமல்லபுரத்தின் குகைக் கோயில்களில் தொல்பொருள் பணிகளுக்காக இவர் மிகவும் பிரபலமானவர். இந்திய அரசு இவருக்கு 1991ல் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் விருதை வழங்கியது.
கே.ஆர்.சீனிவாசன் 1910இல் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி என்ற கோயில் நகரத்தில் பிறந்தார்.[1] தாவரவியலை பாடமாகத் தேர்ந்தெடுத்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பிறகு திருச்சி புனித வளனார் கல்லூரியில் தாவரவியல் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது மூத்த சகோதரர் கே.ஆர்.வெங்கடராமன் ஒரு பிரபல வரலாற்றாசிரியர். மூத்த சகோதரரின் புதுக்கோட்டை பற்றிய ஆய்வுகள் இளம் சீனிவாசனை தொல்பொருள் ஆராய்ச்சிப்பணியில் இணைய ஊக்கப்படுத்தியது. 1936ஆம் ஆண்டில், புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக சேர்ந்தார். பின்னர், இந்த அருங்காட்சியகம் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் கையகப்படுத்தப்பட்டு, அரசாங்க அருங்காட்சியகம், புதுக்கோட்டை என மறுபெயரிடப்பட்டது. 1968 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறும் வரை இதன் துணை இயக்குநராக சேவையில் தொடர்ந்தார்.
சீனிவாசன் தனது சேவையின் போது, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் பல தொல்பொருள் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். இவற்றில் குறிப்பிடத்தக்கவை மாமல்லபுரத்தின் குகைக் கோயில்களில் இவர் செய்த பணிகள். பல்லவ காலத்திலிருந்த கோயில்களை ஆவணப்படுத்திய இவர், தென்னிந்தியாவின் கோயில்கள் என்ற புகழ்ப்பெற்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகம் இந்தி[2] மற்றும் தமிழ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்வி ஆய்வுகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட புத்தகம் இது.[3] மாமல்லபுரத்தில் தனது படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு பல்லவர்களின் குகைக் கோயில்கள் என்ற மற்றொரு புத்தகத்தையும் வெளியிட்டார்.[4] இந்த ஆராய்ச்சியின் போது, கோயில் ஒன்றில் 81 பரதநாட்டிய கரணங்களை சித்தரிக்கும் ஒரு மறைக்கப்பட்ட சிற்பத்தொகுதியை இவர் கண்டுபிடித்தார். பின்னர் இவர் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள போரோபுதூரில் புத்தர் சிலைகளைப் ஆய்வு செய்தார். போரோபுதூர் புத்தரைப் பற்றிய இவரது ஆய்வுகள் புத்தரின் கதை என்ற புத்தகமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தகம் தமிழ்நாட்டின் மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.[5] ஹரப்பன் மற்றும் வேத கலாச்சாரங்கள் [6] மற்றும் வித்யாரண்யாவின் வயது ஆகியவை இவரது மற்ற இரண்டு புத்தகங்கள்.[7]
பிரபல இந்திய பரதநாட்டிய நடனக் கலைஞரான பத்மா சுப்ரமண்யத்தை சீனிவாசன் தனது கரணங்களைப் பற்றிய முனைவர் பட்ட ஆய்வில் வழிநடத்தினார். ஓய்வுக்குப் பிறகு, இவர் மீண்டும் தனது சொந்த ஊரான திருச்சிக்குச் சென்றார், இங்கு இவர் 1992ல் தனது 82 வயதில் இறந்தார்.[8]
சீனிவாசன் இறப்பதற்கு ஒரு வருடம் முன்னதாக 1991ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் விருதை இந்திய அரசு வழங்கி கௌரவித்தது.[9] இவரது நூற்றாண்டு விழா 2011ஆம் ஆண்டில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் அனுசரிக்கப்பட்டது.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)