கூனாக் மாவட்டம் Kunak District Daerah Kunak | |
---|---|
ஆள்கூறுகள்: 4°41′00″N 118°15′00″E / 4.68333°N 118.25000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | தாவாவ் |
தலைநகரம் | கூனாக் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,139 km2 (440 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 68,893 |
• அடர்த்தி | 60/km2 (160/sq mi) |
அஞ்சல் குறியீடு | 91XXX |
வாகனப் பதிவெண்கள் | SD |
இணையதளம் | ww2 ww2 |
கூனாக் மாவட்டம்; (மலாய்: Daerah Kunak; ஆங்கிலம்: Kunak District) என்பது மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். கூனாக் மாவட்டத்தின் தலைநகரம் கூனாக் நகரம் (Kunak Town).[1]
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 1,846 கிலோமீட்டர்கள் (1,147 mi) தொலைவிலும்; சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து 483 கிலோமீட்டர்கள் (300 mi)) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கூனாக் மாநிலத்தில் 68,893 மக்கள் வசிக்கின்றனர்.[2]
சபா மாநிலத்தின் தாவாவ் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கூனாக் மாவட்டத்தின் மக்கள் தொகை 68,893 ஆகும். பெரும்பான்மையோர் பஜாவு (Bajau); மற்றும் பூகிஸ் இனக் குழுவினர். இவர்களுக்கு அடுத்து ஓராங் சுங்கை (Orang Sungei) இன மக்களும் அதிகமாக உள்ளனர்.
கணிசமான அளவில் சீன சிறுபான்மையினரும் உள்ளனர். கூனாக் நகரத்தில் கடை வணிகம் செய்கின்றனர். அத்துடன் புறநகர்ப் பகுதிகளில் எண்ணெய்ப் பனை மரங்களை (Oil Palms) நடுவதிலும் ஈடுபட்டு உள்ளனர்.
அத்துடன் அருகில் உள்ள தெற்கு பிலிப்பீன்சு பகுதியின் சூலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago); மற்றும் மிண்டனாவோ (Mindanao) பகுதியில் இருந்தும், கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களும் உள்ளனர்.