கூரோங் தேசிய பூங்கா தெற்கு ஆஸ்திரேலியா | |
![]() கூரோங் தேசிய பூங்காவின் காட்சி | |
ஆள்கூறுகள்: | 36°02′57″S 139°33′13″E / 36.04917°S 139.55361°E |
பரப்பளவு: | 490.15 கிமீ² (189.2 சது மைல்) [1] |
கூரோங் தேசிய பூங்கா தெற்கு ஆஸ்திரேலியாவின்அடிலெய்டு நகரின் தென்கிழக்கில் சுமார் 156 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது கூரோங் மற்றும் கூரோங்கின் தெற்குப் பகுதியில் உள்ள யங்ஹஸ்பாண்டு தீபகற்பம் என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் கடற்காயல் சுற்றுச்சூழல் அமைப்பை உள்ளடக்கி உள்ளது. கூரோங் கடற்காயலின் மேற்கு முனையானது ஹிந்த்மார்ஷ் தீவு மற்றும் சர் ரிச்சர்ட் தீபகற்பத்திற்கு அருகிலுள்ள முர்ரே முகத்துவாரத்தில் உள்ளது, மேலும் இது சுமார் 130 கிலோமீட்டர் தென்கிழக்கு பகுதி வரை நீண்டுள்ளது. இப்பூங்காவிலிருந்து மெனிங்கி நகரத்திற்கு சாலை வசதி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மிக நீளமான தீபகற்பத்தின் கரையோரப் பகுதியில் உள்ள கடற்கரை தி கூரோங் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.
கூரோங் தேசிய பூங்கா ஆஸ்திரேலிய பழங்குடியினக் குழுவான கர்ரிண்ட்ஜெரி மக்களின் பாரம்பரிய நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளது. பூங்காவில் உள்ள குறிப்பிடத்தக்க இடங்களில் சால்ட் க்ரீக், போலீஸ்மேன்ஸ் பாயின்ட், ஜாக் பாயிண்ட் மற்றும் வூட்ஸ் வெல் ஆகியவை அடங்கும்.
இதன் பெயர் கர்ரிண்ட்ஜெரி மொழி வார்த்தையான குராங்க் என்பதன் சிதைவு என்று கருதப்படுகிறது, குராங் எக்பது நீண்ட அல்லது குறுகிய கடற்காயல் அல்லது கழுத்தைக் குறிக்கிறது [2][3][4]