கூலிம் மாவட்டம் | |
---|---|
Kulim District | |
![]() | |
![]() கெடா மாநிலத்தில் கூலிம் மாவட்டம் அமைவிடம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°20′N 100°35′E / 5.333°N 100.583°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாநகரம் | ![]() |
நகராட்சி | 1. கூலிம் நகராட்சி மன்றம் (கூலிம் நகரம்) 2. கூலிம் உயர் தொழில்நுட்பத்துறை பூங்கா உள்ளூர் ஆணையம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | அப்துல் பாரி அப்துல்லா (Tuan Haji Abdul Bari Bin Abdullah,)[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 765 km2 (295 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 2,72,024 |
• மதிப்பீடு (2015) | 71,300 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 09xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-04 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | K |
கூலிம் மாவட்டம் என்பது (மலாய்:Daerah Kulim; ஆங்கிலம்:Kulim District; சீனம்:居林县) மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் கெடா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் பினாங்கு மாநிலத்தை எல்லையாகக் கொண்டு உள்ளது. பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு கிழக்கே மிக அருகில் (27 km (17 mi)) தொலைவில் உள்ளது.
கூலிம் நகரின் சுதந்திரக் கடிகாரம் (Kulim's independence clock) கெடா சுல்தான் அவர்களால் 1957 செப்டம்பர் 15-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறப்புவிழா கண்டது. அதுவே கூலிம் நகரத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.[2][3]
கூலிம் மாவட்டம் 15 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[4] கூலிம் மாவட்டத்தைக் கூலிம் நகராட்சி மன்றம் நிர்வகிக்கிறது.
கூலிம் மாவட்டம் தற்போது அதன் கூலிம் உயர் தொழில்நுட்பத்துறை பூங்காவால் (Kulim Hi-Tech Park) மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. இந்தப் பூங்கா வளாகம் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான ஒரு தொழில்துறைப் பூங்காவாகும். 1996-இல் திறக்கப்பட்டது.
தவிர மலேசியாவின் முதல் உயர் தொழில்நுட்ப தொழில்துறை பூங்காவாக மாறியது. இந்த மையத்தின் பரப்பளவு 14.5 சதுர கீலோமீட்டர் ஆகும்.[5]
இங்கே இன்டெல் (Intel), எந்தகிரிஸ் (Entegris), பூஜி (Fuji Electric), சில் தெரா (SilTerra), இன்பினோன் (Infineon), பர்ஸ்ட் சோலார் (First Solar), ஏ.ஐ.சி பகுதிக் கடத்தி (AIC Semiconductor), ஷோவா டென்கோ (Showa Denko) போன்ற வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்கள் தத்தம் தொழிற்சாலைகளைத் தோற்றுவித்துச் செயல்பட்டு வருகின்றன.[6]
2019 மார்ச் மாதம், கூலிம் அனைத்துலக விமான நிலையத்தை உருவாக்குவதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பட்டது. அதற்காக ரிங்கிட் 1.6 பில்லியன் (380 மில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்ய நடுவண் அரசு ஒப்புதலைத் தெரிவித்தது.[7]
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கூலிம் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P17 | பாடாங் செராய் | கருப்பையா முத்துசாமி | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
P18 | கூலிம் பண்டார் பாரு | சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
கெடா மாநிலச் சட்டமன்றத்தில் கூலிம் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P17 | N33 | மெர்பாவ் பூலாஸ் | சித்தி ஆயிசா கசாலி | பெரிக்காத்தான் நேசனல் (பாஸ்) |
P17 | N34 | லூனாஸ் | அஸ்மான் நசுருடின் | பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.) |
P18 | N35 | கூலிம் | இயோ கெங் சுவான் | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |