கெத்திரே

கெத்திரே
Ketereh District Council
Majlis Daerah Ketereh
கிளாந்தான்
Map
கெத்திரே is located in மலேசியா
கெத்திரே
      கெத்தேரே
ஆள்கூறுகள்: 5°57′N 102°15′E / 5.950°N 102.250°E / 5.950; 102.250
நாடு மலேசியா
மாநிலம் கிளாந்தான்
மாவட்டம் கோத்தா பாரு
நகரம்கோத்தா பாரு
உள்ளாட்சிகெத்தேரே உள்ளாட்சி மன்றம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
இணையதளம்mdketereh.kelantan.gov.my

கெத்திரே (மலாய் மொழி: Majlis Daerah Ketereh; ஆங்கிலம்: Ketereh District Council) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில், கோத்தா பாரு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்; ஓர் ஊராட்சி மன்றம் ஆகும். [1]

இந்த நகரம் கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரான கோத்தா பாரு நகருக்கு அருகில் கோலா கிராய் - கோத்தா பாரு சாலையில் அமைந்துள்ளது. மலேசிய கூட்டரசு சாலை 8 8 வழியில் கோத்தா பாரு பெருநகரத்திற்கும் மாச்சாங் நகரத்திற்கும் இடையே உள்ளது.

அத்துடன் கெத்திரே நகர்ப்பகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் கெத்திரே மக்களவைத் தொகுதியாகப் பிரதிநிதிக்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், கிளிர் முகமது நார் (Khlir Mohd Nor) என்பவர் மலேசிய மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.[2]

பொது

[தொகு]

கோத்தா பாருவில் இருந்து கோலாலம்பூர் மற்றும் குவா மூசாங் நகரத்திற்கு இடையிலான ஒரு வழித்தட நகரமாக கெத்தேரே கருதப்படுகிறது. கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) எனும் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) (KTMB) நகரங்களுக்கு இடையிலான தொடருந்துகள் கெத்தேரே நகரில் நிற்பது இல்லை. தொடருந்து சேவையைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் அருகிலுள்ள பாசிர் மாஸ் நகரத்திற்குச் செல்ல வேண்டும்.

முந்திரி பழத்தின் (Cashew Fruit) உள்ளூர்ப் பெயரான 'கெத்திரே ' என்பதன் அடிப்படையில் இந்த நகரத்திற்குப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Ketereh District Council (MDK) was officially established on January 1, 1979 under the name Kota Bharu District Council (MDKB)". mdketereh.kelantan.gov.my. 9 July 2023. பார்க்கப்பட்ட நாள் 9 July 2023.
  2. "Kedudukan Kerusi bagi PARLIMEN: P.026 KETEREH". pru14.spr.gov.my. Archived from the original on 9 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 9 July 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]