கெனிங்காவ் (P180) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Keningau (P180) Federal Constituency in Sabah | |
கெனிங்காவ் மக்களவைத் தொகுதி (P180 Keningau) | |
மாவட்டம் | கெனிங்காவ் மாவட்டம் தம்புனான் மாவட்டம் உட்பகுதி பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 87,588 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கெனிங்காவ் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கெனிங்காவ்; தம்புனான்; பிங்கோர், லியாவான் |
பரப்பளவு | 2,231 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | சபா மக்கள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | ஜெப்ரி கித்திங்கான் (Jeffrey Kitingan) |
மக்கள் தொகை | 129,882 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கெனிங்காவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Keningau; ஆங்கிலம்: Keningau Federal Constituency; சீனம்: 根地咬联邦选区) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு; கெனிங்காவ் மாவட்டம், தம்புனான் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P180) ஆகும்.[5]
கெனிங்காவ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து கெனிங்காவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
கெனிங்காவ் மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கெனிங்காவ் நகரம். கெனிங்காவு மாவட்டம் 3,533 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இதன் மேற்கில் குரோக்கர் தேசியப் பூங்கா; மற்றும் தென் கிழக்கில் துருஸ்மாடி மலையும் (Mount Trus Madi) எல்லைகளாக உள்ளன.
சபா மாநிலத்தின் உட்பகுதி பிரிவு, மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது. சபா மாநிலத்தின் பரப்பளவில் 24.9%; அதாவது 18,298 சதுர கி.மீ.; சபாவின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 14.7% கொண்டு உள்ளது. உட்பகுதி பிரிவில் உள்ள மிகப் பெரிய நகரம் கெனிங்காவ்.[7]
கெனிங்காவ் நகரம் என்பது சபா மாநிலத்தின் ஐந்தாவது பெரிய நகரம் ஆகும். மாநிலத் தலைநகர் கோத்தா கினபாலுவில் இருந்து 180 கி.மீ. தொலைவில் அமைந்து இருந்தாலும்; தம்புனான், தெனோம் ஆகிய இரு பெரும் நகரங்களுக்கும் இடையில் இந்த நகரம் அமைந்து உள்ளது.
கெனிங்காவ் நகரத்தில் முக்கியமாக கடசான், மூருட், சீனர்கள், பஜாவ் மக்கள் வசிக்கின்றனர். செம்பனைத் தோட்டங்களில் கணிசமான அளவிற்கு இந்தோனேசிய மக்கள் பணிபுரிகின்றனர். ஒரு காலத்தில் இலவங்கப்பட்டை மற்றும் வெப்பமண்டல மரங்களுக்கு பெயர் பெற்ற இடமாக விளங்கியது.[8]
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ஜெப்ரி கித்திங்கான் (Geoffrey Kitingan) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 23,155 | 42.20 | 42.20 | |
கிரேலியா கில்லோட் (Grelydia Gillod) | பாக்காத்தான் (PH) | 15,099 | 27.52 | 27.52 | |
ரசினின் கூடிஸ் (Jake Nointin) | மக்களாட்சி கட்சி (KDM) | 9,598 | 17.49 | 17.49 | |
மார்க்கோஸ் சித்தோன் (Rasinin Koutis) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 7,020 | 12.79 | 18.95 ▼ | |
மொத்தம் | 54,872 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 54,872 | 98.79 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 670 | 1.21 | |||
மொத்த வாக்குகள் | 55,542 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 87,588 | 62.65 | 16.37 ▼ | ||
Majority | 8,056 | 14.68 | 14.57 | ||
சபா மக்கள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)