கென் சுவாபர்

கென் சுவாபர் (Ken Schwaber) ஒரு மென்பொருள் உருவாக்குநர், தயாரிப்பு மேலாளர் மற்றும் மென்பொருள் தொழில் ஆலோசகரும் ஆவார்.

கென் சுவாபர், 2010

தற்போது மென்பொருள் தயாரிப்பிற்கும் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வழிமுறையான இசுக்கிரம் முறையியலை ஜெஃப் சதர்லேண்டு (Jeff Sutherland) அவர்களுடன் இணைந்து 1993 ஆம் ஆண்டு முறைப்படுத்தினார்.

OOPSLA'95 -ல் இசுக்கிர முறையியலை ஒரு முறையான வழிமுறையாக முன்வைப்பதற்காக ஜெஃப் சதர்லேண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றி இசுக்கிர முறையியலின் முதல் பதிப்புகளை வெளியிடுவதில் பெரும்பங்காற்றினார். இவர்கள் இருவரும் பல மென்பொருள் நிறுவனங்களில் இசுக்கிர முறையியலை நடைமுறைப்படுத்தி, விரிவாக்கி, மேம்படுத்தியுள்ளனர்.

Scrum Guide எனப்படும் இசுக்கிர கையேட்டின் இணை ஆசிரியர். இவரால் நடத்தப்பட்டு வரும் Scrum.org என்ற நிறுவனம், மென்பொருள் வல்லுனர்களுக்கும், மென்பொருள் நிறுவனங்களுக்கும் இசுக்கிர முறையியல் பயிற்சிகளை அளித்து, தேர்வுகளை நடத்தி, சான்றிதழ்களை வழங்கி வருகிறது.