கென்றி கெய்டன் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 28, 1979 மெம்ஃபிஸ், டென்னிசி, ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2010–இன்று வரை |
கென்றி கெய்டன் (English: Henry Gayden) (பிறப்பு: திசம்பர் 28, 1979) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் எர்த் டு எக்கோ (2014), ஷசாம்! (2019) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியதன் மூலம் அறியப்படுகிறார்.
கென்றி திசம்பர் 28, 1979 ஆம் ஆண்டில் மெம்ஃபிஸ், டென்னிசியில் பிறந்தார். இவர இவரது இளமை பருவத்தில், கெய்டன் மெம்பிஸ் பல்கலைக்கழகப் பள்ளியில் பயின்றார், பட்டம் பெற்ற பிறகு, ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடங்கினார், அங்கு அவர் ஆங்கிலம் மற்றும் வானொலி-தொலைக்காட்சி-திரைப்படத்தில் தேர்ச்சி பெற்றார்.[1] இவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தி டெய்லி டெக்ஸான் என்ற செய்தி நாளிழதில் பொழுதுபோக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றினார்.[2] பின்பு பட்டப்படிப்பை முடித்த பிறகு, திரைக்கதை எழுதும் தொழிலைத் தொடர லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு சென்றார்.[3]
இவர் 2013 ஆம் ஆண்டில் எர்த் டு எக்கோ என்ற அறிவியல் புனைகதை சாகசத் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார், இது பின்னர் டேவ் கிரீன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியானது.[4] அதை தொடர்ந்து 2017 இல் டேவிட் எப். சாண்ட்பெர்க்கு இயக்கிய டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்ச மீநாயகன் திரைப்படமான ஷசாம்! படத்திற்கு திரைக்கதை எழுத இவர் பணியமர்த்தப்பட்டார்.[5] வெளியான படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.[6] அதை தொடர்ந்து இதன் தொடர்ச்சி படமான ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு என்ற திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளர்.[7][8]