கெப்பாலா பத்தாஸ் | |
---|---|
Kepala Batas | |
பினாங்கு | |
ஆள்கூறுகள்: 5°31′0″N 100°25′0″E / 5.51667°N 100.41667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வட செபராங் பிறை |
நாடாளுமன்ற தொகுதி | கெப்பாலா பெத்தாஸ் |
அரசு | |
• உள்ளூராட்சி | செபராங் பிறை நகராண்மைக் கழகம் |
• மக்களவை உறுப்பினர் | ரீசால் மரிக்கான் நைனா முகமது பாரிசான் நேசனல் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 13200 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +604 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
இணையதளம் | http://www.mbsp.gov.my |
கெப்பாலா பத்தாஸ் (ஆங்கிலம்: Kepala Batas; மலாய் Kepala Batas; சீனம்: 甲抛峇底; சாவி: كڤالا باتس) என்பது மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில்; அமைந்துள்ள நகரம். இந்த நகரம் வட செபராங் பிறை மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் உள்ளது.
வட செபராங் பிறை மாவட்டத்திற்கான அனைத்து அரசாங்க அலுவலகங்களும் இங்குதான் உள்ளன.[1][2] இது பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில்; பட்டர்வொர்த் நகரில் இருந்து சுங்கை பட்டாணி நகருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
கெப்பாலா பத்தாஸ் நகருக்கு அருகாமையில் உள்ள நகரங்கள் தாசேக் குளுகோர், பெனாகா மற்றும் புக்கிட் மெர்தாஜாம். இந்த நகர்ப் பகுதியில் இருக்கும் தாசேக் குளுகோர் இரயில் நிலையம், இப்போது இங்கு வசிக்கும் மக்களுக்கு, தெற்கு நோக்கி பயணிக்க மற்றொரு மாற்று வழியாக விளங்குகிறது.
மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் அப்துல்லா அகமது படாவி இந்தக் கெப்பாலா பத்தாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது, காலத்தில் துணைப் பிரதமராக இருந்தவர். மகாதீர் பதவி ஓய்வு பெற்றதும் அப்துல்லா படாவி பிரதமராக நியமிக்கப்பட்டார்.
கெப்பாலா பத்தாஸ் பகுதியின் குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள் மற்றும் பொதுச் சேவை ஊழியர்கள்: