கெப்பாலா பத்தாஸ் மக்களவைத் தொகுதி

கெப்பாலா பத்தாஸ் (P041)
மலேசிய மக்களவைத் தொகுதி
பினாங்கு
Kepala Batas (P041)
Federal Constituency in Penang
பினாங்கு மாநிலத்தில்
கெப்பாலா பத்தாஸ் மக்களவைத் தொகுதி
மாவட்டம்வட செபராங் பிறை மாவட்டம்; பினாங்கு
வாக்காளர் தொகுதிகெப்பாலா பத்தாஸ் தொகுதி
முக்கிய நகரங்கள்கெப்பாலா பத்தாஸ், தாசேக் குளுகோர், புக்கிட் மெர்தாஜாம்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பெரிக்காத்தான் நேசனல்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்சித்தி மசுதுரா முகமது
(Siti Mastura Mohamad)
வாக்காளர்கள் எண்ணிக்கை83,081
தொகுதி பரப்பளவு138 ச.கி.மீ[1]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் கெப்பாலா பத்தாஸ் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (80.4%)
  சீனர் (15.5%)
  இதர இனத்தவர் (0.2%)

கெப்பாலா பத்தாஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kepala Batas; ஆங்கிலம்: Kepala Batas Federal Constituency; சீனம்: 甲抛峇底联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வட செபராங் பிறை மாவட்டத்தில் (North Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P041) ஆகும்.[2]

கெப்பாலா பத்தாஸ் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து கெப்பாலா பெத்தாஸ் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), கெப்பாலா பத்தாஸ் தொகுதி 29 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[3]

பொது

[தொகு]

வட செபராங் பிறை மாவட்டம்

[தொகு]

வட செபராங் பிறை மாவட்டம் (North Seberang Perai District) பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம்; 267 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்த மாவட்டத்தின் வடக்கில் மூடா ஆறு செல்கிறது. இந்த ஆறு கெடா மாநிலத்தில் உள்ள கோலா மூடா மாவட்டம்; வட செபராங் பிறை மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களையும் பிரிக்கின்றது.

தாசெக் குளுகோர்

[தொகு]

இந்த மாவட்டத்தின் தலைநகரம் கெப்பாலா பத்தாஸ். மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் பட்டர்வொர்த். வடக்கு செபராங் பிறையில் அமைந்துள்ள பிற இடங்கள்: பெனாகா, பினாங்கு துங்கல், பெர்டா, தாசேக் குளுகோர், தெலுக் ஆயர் தாவார் மற்றும் மாக் மண்டின்.

பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை பகுதியில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த வட செபராங் பிறை மாவட்டத்தில் பெரும்பாலும் நெல் பயிரிடப் படுகிறது. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நெல் வயல்களைக் கொண்டவை ஆகும்.

மாவட்ட எல்லைகள்

[தொகு]
  1. மூடா ஆறு - (வடக்கில்)
  2. பாடாங் செராய் - (கிழக்கில்)
  3. பிறை ஆறு - (தெற்கில்)
  4. மலாக்கா நீரிணை - (மேற்கில்)

கெப்பாலா பத்தாஸ் மக்களவைத் தொகுதி

[தொகு]
கெப்பாலா பெத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
செபராங் உத்தாரா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை 1974-1978 முகமது சோபி சேக்
(Mohamed Sopiee Sheikh)
பாரிசான் நேசனல்
((அம்னோ)
5-ஆவது மக்களவை 1978-1982 அப்துல்லா அகமது படாவி
(Abdullah Ahmad Badawi)
6-ஆவது மக்களவை 1982-1986
7-ஆவது மக்களவை 1986-1990
8-ஆவது மக்களவை 1990-1995
9-ஆவது மக்களவை 1995-1999
10-ஆவது மக்களவை 1999-2004
11-ஆவது மக்களவை 2004-2008
12-ஆவது மக்களவை 2008-2013
13-ஆவது மக்களவை 2013–2018 ரீசால் மெரிக்கான்
(Reezal Merican)
14-ஆவது மக்களவை 2018–2022
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் சித்தி மசுதுரா முகமது
(Siti Mastura Mohamad )
பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (கெப்பாலா பத்தாஸ் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
83,081 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
70,150 83.41%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
69,302 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
134 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
714' -
பெரும்பான்மை
(Majority)
2,867 4.13%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான்
Source: Results of Parliamentary Constituencies of Kedah

கெப்பாலா பத்தாஸ் வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
சித்தி மசுதுரா முகமது
(Siti Mastura Mohamad)
பெரிக்காத்தான் 28,604 41.27% +41.27 Increase
ரீசால் மெரிக்கான் நைனா மெரிக்கான்
(Reezal Merican Naina Merican)
பாரிசான் 25,737 37.14% -5.80
முகமது டேனியல் அப்துல் மஜீத்
(Muhammad Danial Abdul Majeed)
மூடா 14,214 20.51% +20.51 Increase
அமிதி அபு அசன்
(Hamidi Abu Hassan)
உள்நாட்டு போராளிகள் கட்சி 747 1.08 % +1.08 Increase

கெப்பாலா பத்தாஸ் சட்டமன்ற தொகுதிகள்

[தொகு]
நாடாளுமன்றம் சட்டமன்றம்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
கெப்பாலா பத்தாஸ் பெர்த்தாம்
பெனாகா
பினாங்கு துங்கல்
தாசேக் குளுகோர்

கெப்பாலா பத்தாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

[தொகு]
எண் தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N01 பெனாகா
(Penaga)
முகமட் உசுனி மாட் பியா
(Mohd Yusni Mat Piah)
பெரிக்காத்தான் (பாஸ்)
N02 பெர்த்தாம்
(Bertam)
காலிக் மெதாப் முகமது இசாக்
(Khaliq Mehtab Mohd Ishaq)
பெரிக்காத்தான் (பெர்சத்து)
N03 பினாங்கு துங்கல்
(Pinang Tunggal)
அகமத் சகியுதீன் அப்துல் ரகுமான்
(Ahmad Zakiyuddin Abd. Rahman)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)

மேலும் காண்க

[தொகு]