கெப்போங் (P114) மலேசிய மக்களவைத் தொகுதி கோலாலம்பூர் | |
---|---|
Kepong (P114) Federal Constituency in Kuala Lumpur | |
மாவட்டம் | மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள் கோலாலம்பூர் |
வாக்காளர் தொகுதி | கெப்போங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலாலம்பூர்;, கெப்போங், குவாங், கோலா சிலாங்கூர், டாமன்சாரா |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | லிம் லிப் எங் (Lim Lip Eng) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 94,285 (2022)[1] |
தொகுதி பரப்பளவு | 12 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
கெப்போங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batu; ஆங்கிலம்: Batu Federal Constituency; சீனம்: 峇都爱国会) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P114) ஆகும்.
கெப்போங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து கெப்போங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கெப்போங் நகரம் கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவிலும்; பெட்டாலிங் ஜெயா நகரின் தென்மேற்கே 12 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது. அருகாமையில் உள்ள நகரங்கள்:
’கெப்போங்’ என்பது ஒரு மலாய்ச் சொல். "சூழ்" அல்லது "சுற்று" என்று பொருள். இந்த நகரம் ஒரு மலைத்தொடரால் சூழப்பட்டு உள்ளது. அதனால் அந்தப் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம்.
கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேசத்தின் 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் கெப்போங் ஒன்றாகும். இந்தத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பாக்காத்தான் ஹரப்பான் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த லிம் லிப் எங் (Lim Lip Eng) ஆவார்.[4]
கெப்போங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2023) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் பத்து மக்களவைத் தொகுதியில் இருந்து கெப்போங் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P084 | 1974–1978 | டான் சி கூன் (Tan Chee Khoon) |
மலேசிய சமூக நீதிக் கட்சி |
5-ஆவது மக்களவை | 1978–1982 | டான் தியோங் கோங் (Tan Tiong Hong) |
பாரிசான் நேசனல் கெராக்கான் | |
6-ஆவது மக்களவை | 1982–1986 | டான் செங் கியாவ் (Tan Seng Giaw) |
ஜனநாயக செயல் கட்சி | |
7-ஆவது மக்களவை | P096 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P103 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | மாற்று பாரிசான் (ஜனநாயக செயல் கட்சி) | ||
11-ஆவது மக்களவை | P114 | 2004–2008 | ஜனநாயக செயல் கட்சி | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | லிம் லிப் எங் (Lim Lip Eng) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
94,285 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
72,657 | 77.06% | ▼ -8.97 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
72,319 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
70 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
268 | ||
பெரும்பான்மை (Majority) |
61,081 | 84.46% | +0.38 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[5][6] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
லிம் லிப் எங் (Lim Lip Eng) |
பாக்காத்தான் | 72,319 | 64,308 | 88.92% | -3.12 ▼ | |
யாப் செங் கோ (Yap Zheng Hoe) |
பாரிசான் | - | 3,227 | 4.46 | -3.50 ▼ | |
பாங் ஜிங் பாட் (Phang Jing Fatt) |
பெரிக்காத்தான் | - | 2,795 | 3.86% | +3.86 | |
இயோ போ பிங் (Yee Poh Ping) |
சுயேச்சை | - | 1,461 | 2.02% | -2.72 ▼ | |
யோங் சாங் இயீ (Young Shang Yi) |
சபா பாரம்பரிய கட்சி | - | 528 | 0.73% | +0.73 |