கெமாமான் (P040) மலேசிய மக்களவைத் தொகுதி திராங்கானு | |
---|---|
Kemaman (P040) Federal Constituency in Terengganu | |
கெமாமான் மக்களவைத் தொகுதி (P040 Kemaman) | |
மாவட்டம் | கெமாமான் மாவட்டம் திராங்கானு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 141,790 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | கெமாமான் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கிஜால், கெமாசிக், கெர்த்தே, கெமாமான் மாவட்டம் |
பரப்பளவு | 84.9 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அகமது சம்சுரி மொக்தார் (Ahmad Samsuri Mokhtar) |
மக்கள் தொகை | 215,582 (2020)[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
கெமாமான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kemaman; ஆங்கிலம்: Kemaman Federal Constituency; சீனம்: 甘馬挽國會議席) என்பது மலேசியா, திராங்கானு, கெமாமான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P040) ஆகும்.[8]
கெமாமான் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து கெமாமான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
கெமாமான் மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்; திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். அவற்றில் தென்சீனக் கடலை ஒட்டிய மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
கெமாமன் மாவட்டத்திற்கு கிழக்கில் தென் சீனக்கடல்; வடக்கில் டுங்குன் மாவட்டம் (Dungun District); தெற்கிலும் மேற்கிலும் பகாங் மாநிலம் எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தெற்கு நுழைவாயிலாக அமைகின்றது. கெமாமான் மாவட்டத்தின் நிர்வாக மையம் மற்றும் முக்கியப் பொருளாதார மையம் சுக்காய் நகரம். திராங்கானு - பகாங் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் உள்ளது.
இந்த மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கிய நகரங்கள் கிஜால், கெர்த்தே மற்றும் கெமாசிக். இந்த மாவட்டம் ஒரு நகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப் படுகிறது. ஏறக்குறைய 1000 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டது. உலு திராங்கானு மாவட்டத்திற்கு அடுத்த நிலையில், இந்த மாவட்டம் மூன்றாவது பெரிய மாவட்டமாகும்.
கெமாமான் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் கெமாமான் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P029 | 1959–1963 | வான் யகயா வான் முகமது (Wan Yahya Wan Mohamed) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P029 | 1963–1964 | வான் யகயா வான் முகமது (Wan Yahya Wan Mohamed) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
2-ஆவது மக்களவை | 1964–1969 | வான் மொக்தார் அகமது (Wan Mokhtar Ahmad) | ||
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[10] | |||
3-ஆவது மக்களவை | P029 | 1971–1973 | வான் மொக்தார் அகமது (Wan Mokhtar Ahmad) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
1973–1974 | பாரிசான் நேசனல் (அம்னோ) | |||
4-ஆவது மக்களவை | P034 | 1974–1976 | வான் அப்துல் காதர் இசுமாயில் (Wan Abdul Kadir Ismail) | |
1976–1978 | அப்துல் மனான் ஒசுமான் (Abdul Manan Othman) | |||
5-ஆவது மக்களவை | 1978–1982 | இசுமாயில் மன்சூர் சாயிது (Ismail Mansor Said) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P037 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P040 | 1995–1999 | ரம்லி தாயிப் (Ramli Taib) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | அப்துல் ரகுமான் யூசோப் (Abd Rahman Yusof) |
மாற்று முன்னணி (கெஅடிலான்) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | அகமது சப்ரி சிக் (Ahmad Shabery Cheek) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2020 | சே அலியாஸ் அமீத் (Che Alias Hamid) |
காகாசான் செஜத்திரா (மலேசிய இசுலாமிய கட்சி) | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–2023 | |||
2023–தற்போது வரையில் | அகமது சம்சுரி மொக்தார் (Ahmad Samsuri Mokhtar) |
(சே அலியாஸ் அமீத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர்)
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | அகமது சம்சுரி மொக்தார் (Ahmad Samsuri Mokhtar) |
64,998 | 70.06% | + 11.95% | |
பாரிசான் நேசனல் | ராஜா முகமது அபான்டி (Raja Mohamed Affandi) |
27,778 | 29.94% | - 4.13% ▼ | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 92,776 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 478 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 35 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 93,289 | 65.76% | - 15.36% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 141,043 | ||||
பெரும்பான்மை (Majority) | 37,220 | 40.12% | + 16.08% | ||
மலேசிய இசுலாமிய கட்சி | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11] |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
1 | மலேசிய இசுலாமிய கட்சி | சே அலியாஸ் அமீத் (Che Alias Hamid) |
65,714 | 58.11% | + 14.05% |
2 | பாரிசான் நேசனல் | அகமது சாயிட் (Ahmad Said) |
38,535 | 34.07% | - 7.60% ▼ |
3 | பாக்காத்தான் அரப்பான் | அசுனி சுடின் (Hasuni Sudin) |
8,340 | 7.37% | - 6.90% ▼ |
4 | தாயக இயக்கம் | ரொசுலி அப்துல் கனி (Rosli Abd Ghani) |
506 | 0.45% | + 0.45% |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 113,095 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 1,288 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 150 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 114,553 | 81.12% | - 4.39% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 139,423 | ||||
பெரும்பான்மை (Majority) | 27,179 | 24.04% | + 21.65% | ||
மலேசிய இசுலாமிய கட்சி | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[12] |