கெம்மா இலாவெண்டெர் (Gemma Lavender) (பிறப்பு: 13 செப்டம்பர் 1986) ஒரு பிரித்தானிய வானியலாளரும் எழுத்தாளரும் இதழியலாளரும் ஆவார்.[1] இவர் இப்போது All About Space இதழின் பதிப்பாசிரியராக உள்ளார்.[2] இது பெரும்பிரித்தானியா, பவுர்னேமவுத் பிரித்தானிய வெளியீட்டாளர் வெளியிடும் அறிவியல் மாத இதழாகும்.
இலாவெண்டெர் கெண்டில் உள்ள சாத்தமில் பிறந்தார். பிறகு வேல்சு பெம்புரோக்சயருக்கு இளம் அகவையிலேயே இடம் மாறினார். அங்கு வைட்லாந்தில் உள்ள இசுகோல் திப்ரின் தாப் பள்ளியில் படித்தார். பின்னர் கார்திப் பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் மூதியற்பியல் பட்டம் பெற்றார்.[3] இவர் இயற்பியல் நிறுவனத்தின் வானியல் இன்று இதழோடு தொடர்பில் உள்ளார். நாசாவிலும் எழுத்தாளராக பணிபுரிகிறார். இவர் 2011 இல் அரசு வானியல் கழகத்தில் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[4]