கெயில் ஓம்வேதித் | |
---|---|
பிறப்பு | மினியாப்பொலிஸ், U.S. | 2 ஆகத்து 1941
இறப்பு | (அகவை 0) |
தொழில் | எழுத்தாளர், கட்டுரையாளார், செயற்பாட்டாளர் |
கல்வி நிலையம் | Carleton College கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) |
காலம் | 1970–2021 |
துணைவர் | பாரத் பதங்கர் |
கெயில் ஓம்வேதித் (Gail Omvedt, 2 ஆகத்து 1941 – 25 ஆகத்து 2021) என்பவர் ஒரு சமூகவியல் அறிஞரும் மனித உரிமைகளுக்குப் பாடுபடும் செயற்பாட்டாளரும், சாதிய அமைப்பை எதிர்த்துப் பரப்புரை செய்பவரும் ஆவார். இவர் அமெரிக்காவில் பிறந்து இந்தியாவில் குடியுரிமை பெற்ற பெண்மணி ஆவார்.
கெயில் ஒம்வேதித் அமெரிக்காவில் மின்னபாலிசு என்னும் ஊரில் பிறந்தார். கார்ல்டன் கல்லூரியில் படித்தார். பெர்கிளின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் குமுகவியலில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.
1978 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். தெற்கு மகாராட்டிரத்தில் கசேகான் என்னும் சிற்றுரில் வாழ்ந்து வருகிறார். 1983 முதல் இந்தியாவில் குடியுரிமை பெற்றார். சாதிய அமைப்பை எதிர்த்தும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் உரிமைகளுக்காகப் பல நூல்களை எழுதினார். பெண்கள் உரிமை இயக்கம் சூழல் பாதுகாப்பு இயக்கம் விவசாயிகள் இயக்கம் ஆகியவற்றில் பங்கேற்று வருகிறார். சாங்க்லி, சத்தாரா ஆகிய மாவட்டங்களில் கைவிடப் பட்ட பெண்களின் வாழ்வுரிமைகளுக்கான அமைப்பை நடத்தி வந்தார். விவசாயப் பெண்களின் நிலஉரிமைகளுக்கும் அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.
புனே பல்கலைக் கழகத்தில் சமுக நீதிக்கான துறையில் பேராசிரியராக இருந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக "டாக்டர் அம்பேத்கர் குமுக மாற்றம் வளர்ச்சி இருக்கை" என்னும் துறையில் பணி செய்தார். 2012 இல் அப்பதவியிலிருந்து ஓய்வு அடைந்தார்.