கெர்பெத்தோதெரினே (Herpetotherinae) என்பது பால்கோனிட் கொன்றுண்ணிப் பறவைகளின்துணைக்குடும்பமாகும். இதில் கெர்பெத்தோதெரசு (சிரிக்கும் வல்லூறு) மற்றும் மைக்ராசுடூர் (வன வல்லூறு) ஆகிய இரண்டு பேரினங்களில் எட்டு சிற்றினங்கள் உள்ளன.[1][2][3][4] இரண்டு பேரினங்களும் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன. இத்துணைக் குடும்பம் மற்ற பால்கோனிட் துணைக் குடும்பங்களுக்கு அடித்தளமாக உள்ளது. சுமார் 30.2 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒலிகோசீன் சகாப்தத்தில் இத்துணைக் குடும்பங்கள் பிரிந்தன.[4] தற்போதுள்ள இரண்டு கெர்பெத்தோதெரினே பேரினங்கள் சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மியோசீன் சகாப்தத்தில் அழிந்துபோன தேகோர்னிசு பேரினத்துடன் பிரிந்து பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன.[2]
↑ 2.02.1Fuchs, J.; Johnson, J. A.; Mindell, D. P. (2015). "Rapid diversification of falcons (Aves: Falconidae) due to expansion of open habitats in the Late Miocene." (in en). Molecular Phylogenetics and Evolution82: 166–182. doi:10.1016/j.ympev.2014.08.010. பப்மெட்:25256056.
↑Wink, M. (2018). "Phylogeny of Falconidae and phylogeography of Peregrine Falcons." (in en). Ornis Hungarica26 (2): 27–37. doi:10.1515/orhu-2018-0013.
↑ 4.04.1Mindell, M. D.; Fuchs, J.; Johnson, J. A. (2018). "1". In Sarasola, J.; Grande, J.; Negro, J. (eds.). Birds of Prey: Biology and conservation in the XXI century. Springer, Chame. pp. 3–32. doi:10.1007/978-3-319-73745-4_1. ISBN978-3-319-73745-4.