கே. ஆசிஃப் | |
---|---|
முகல்-இ-அசாம் படப்பிடிப்பில் (1960). | |
பிறப்பு | ஆசிப் கரீம் 14 சூன் 1922 இட்டாவா, ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 9 மார்ச்சு 1971 மும்பை, இந்தியா | (அகவை 48)
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1945 - 1971 |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 4 |
கே. ஆசிப் ( K. Asif ) (பிறப்பு கரிமுதீன் ஆசிப் ; 14 ஜூன் 1922 - 9 மார்ச் 1971) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார்.[1]
கரிமுதீன் ஆசிப் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் எட்டாவாவில் டாக்டர் பசல் கரீம் மற்றும் பீபி குலாம் பாத்திமா ஆகியோருக்கு பிறந்தார். ஆசிப் மும்பைச் சென்று பாலிவுட்டில் தனக்கானா தொழில் வாழ்க்கையைத் தேடினார். [2] பின்னர். கே. ஆசிப் என்ற பெயரில் ஓர் வெற்றிகரமான திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் ஆனார்.
இயக்குனரான அறிமுகமான பூல் (1945) திரைப்படம் திரையரங்குகலில் நன்றாக ஓடியது.[2][3] 1944 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் அக்பரின் வாழ்க்கை மற்றும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு முகல்-இ-அசாம் என்ற திரைப்படத்தை உருவாக்க ஆசிப் திட்டமிட்டார்.[4] இது இம்தியாஸ் அலி தாஜ் எழுதிய உருது நூலான 'அனார்கலி' யை அடிப்படையாகக் கொண்டது. இதில் சந்திரமோகன் ஆண் கதாநாயகனாகவும், நடிகை நர்கிசு கதாநாயகியாகவும் நடித்தனர். இருப்பினும், 1946 ஆம் ஆண்டில், படத்தின் தயாரிப்பு தொடங்குவதற்கு முன்பே, சந்திரமோகன் இறந்தார். அந்த நேரத்தில், ஆசிப் படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். பின்னர், ஹுல்சுல் என்ற திரைப்படத்தை தயாரித்து 1951 இல் வெளியிட்டார்.[2]
பின்னர், ஆசிப் முகல்-இ-அசாம் படத்தை மீண்டும் படத் தயாரிப்பைத் தொடங்கினார். இதில் திலீப் குமார் ஆண் கதாபாத்திரத்திலும், மதுபாலா பெண் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.[2] பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1960 இல், முகல்-இ-அசாம் வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதும் பெரும் வெற்றியைப் பெற்றது.[2]
கே. ஆசிப் நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். பாடகியும் நடிகையுமான சித்தாரா தேவி ஆசிப்பின் இரண்டாவது மனைவி ஆவார். ஆசிப் மற்றும் சிதாராவின் திருமணம் சில மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. இவர்கள் விரைவில் விவாகரத்து செய்தனர். பின்னர் முகல்-இ-அசாம் படத்தில் "பஹார் பேகம்" என்ற வேடத்தில் நடித்த நடிகை நிகர் சுல்தானாவை மணந்தார். இவர்களுக்கு ஹீனா கௌசர் என்ற ஒரு மகள் பிறந்தார்.[5] இவரது மகள் பல மறக்கமுடியாத படங்களில் சிறிய வேடங்களில் தோன்றினார். மும்பையில் அமைந்த குற்றவாளி அமைப்பின் தலைவரும் இந்தியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான இக்பால் மிர்ச்சி என்பவருக்கு மனைவியானார்.[6]
கடைசியாக நடிகர் திலீப் குமாரின் இளைய சகோதரியான அக்தர் பேகம் என்பவரை ஆசிப் நான்காவதாக திருமணம் செய்து கொண்டார்.[2] ஆசிப் இறந்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1986 இல் வெளியான ஆசிப்பின் கடைசி திரைப்படமான "லவ் அண்ட் காட்" திரைப்படத்தை அக்தர் பேகம் நிறைவு செய்து வெளியிட்டார்.[2]