கே. ஆர். கங்காதரன் | |
---|---|
பிறப்பு | கே. ஆர். கங்காதரன் 1936 |
இறப்பு | 19 சூன் 2012[1] இந்திய ஒன்றியம், சென்னை | (அகவை 76)
தேசியம் | இந்தியர் |
பணி | தயாரிப்பாளர் |
கே. ஆர். ஜி என்று பிரபலமாகக் குறிப்பிடப்பட்ட கே. ஆர் கங்காதரன் (K. R. Gangadharan, 1936–2012) ஒரு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளராவார். இவர் 'கே. ஆர். ஜி புரொடக்சன்ஸ்', 'கே. ஆர். ஜி ஆர்ட் புரொடகசன்ஸ்', 'கே. ஆர். ஜி எண்டர்பிரைசஸ்', 'கே. ஆர். ஜி மூவிஸ் இன்டர்நேசனல்' போன்ற பதாகைகளின் கீழ் தமிழ், மலையாள மொழிகளில் 60 க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தார்.
இவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சபையின் நிறுவனர் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தவர். அந்த வர்த்தக சபையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், படப்பிடிப்பு அரங்க உரிமையாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.[2]
கே. ஆர். ஜி 19 சூன் 2012 அன்று தன் 76 வயதில் இறந்தார். உடல் நலக்குறைவால் இவர் சென்னை, தி. நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் தேறிவந்தார். மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு செல்லவிருந்தபோது, சரிந்து விழுந்து, விரைவில் இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இவருக்கு மனைவி மற்றும் மகள் இருந்தனர்.
ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1975 | ஆயிரத்தில் ஒருத்தி | தமிழ் | |
1978 | சிகப்பு ரோஜாக்கள் | தமிழ் | |
1980 | ஜானி | தமிழ் | |
1981 | கடல் மீன்கள் | தமிழ் | |
1982 | அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை | தமிழ் | |
1983 | துடிக்கும் கரங்கள் | தமிழ் | |
1984 | திருப்பம் | தமிழ் | |
1984 | ஆலய தீபம் | தமிழ் | |
1985 | நேர்மை | தமிழ் | |
1986 | தாய்க்கு ஒரு தாலாட்டு | தமிழ் | |
1987 | காவலன் அவன் கோவலன் | தமிழ் | |
1988 | சங்கம் | மலையாளம் | |
1989 | அதிபன் | மலையாளம் | |
1989 | சகலகலா சம்மந்தி | தமிழ் | |
1989 | வடக்குனொக்கியந்த்ரம் | மலையாளம் | |
1989 | வரவெல்பு | மலையாளம் | |
1989 | வர்ணம் | மலையாளம் | |
1990 | லால்சலாம் | மலையாளம் | |
1990 | ஒலியம்புகல் | மலையாளம் | |
1991 | நீலகிரி | மலையாளம் | |
1992 | சிவந்த மலர் | தமிழ் | |
1993 | பார்வதி என்னை பாரடி | தமிழ் | |
1999 | மின்சார கண்ணா | தமிழ் | |
2000 | சுதந்திரம் | தமிழ் | |
2000 | பட்ஜெட் பத்மநாபன் | தமிழ் | |
2001 | மிடில் கிளாஸ் மாதவன் | தமிழ் | |
2001 | மனதை திருடிவிட்டாய் | தமிழ் | |
2009 | குரு என் ஆளு | தமிழ் |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)